முகநூல் நண்பர்களின் கவனத்திற்கு,
அன்புடையீர்,
வணக்கம். என்னுடைய முகநூல் கணக்குத் தளம் (Wall) மூன்றாவது முறையாக முடக்கப்பட்டுவிட்டது. மதுரை மத்திய சிறையில் ராஜீவ் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான இரவிச்சந்திரனை சந்தித்ததையும், இளைய பாரதியின் வ.உ.சி. நூலகம் வெளியிட்ட வேலுப்பிள்ளை பிராபகரன், ஈழப்போரின் வரலாறு குறித்தும், இன்றைய ஈழத்தில் நடக்கும் வேதனைகளும், அங்கு புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் சமஷ்டி அமைப்பு தமிழர்களுக்கு இல்லையென்றும், ஒற்றை ஆட்சி தான் என்று கடந்த இரண்டு நாட்களில் நான் எழுதிய தொடர் பதிவுகளால் முடக்கப்பட்டுவிட்டது என்று நினைக்கின்றேன். யார் கைங்கரியமோ, அவர்களுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சி.
எனவே புதிய முகநூல் கணக்கை நான்காவது முறையாக துவங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இனிமேல் நண்பர்கள் இந்த கணக்கில் என்னைத் தொடரலாம்.
என்னுடைய முகநூல் பக்கமான https://www.facebook.com/RadhakrishnanKS1956/ என்ற பக்கத்திலும் நீங்கள் பின்தொடரலாம்.
நன்றி.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRadhakrishnanPostings
#KSRPostings
29/01/2018
No comments:
Post a Comment