Wednesday, January 31, 2018

பரம்பிக்குளம் – ஆழியாறு சிக்கல்


தமிழகம், கேரளம் இடையேயான பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்ப் பகிர்வு உடன்படிக்கையை மறுஆய்வுக்கு உட்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளா அரசு தமிழகத்தோடு அனைத்து நதிநீர் ஆதாரங்களின் சிக்கல்களில் பிரச்சனைகளை உருவாக்குவதே வாடிக்கை ஆகிவிட்டது.
Image result for aliyar dream
சென்னையில் அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள அரசுத் துறைச் செயலர்கள் கூட்டத்தில் இதுகுறித்து வலியுறுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக கேரள சட்டப் பேரவையில் கடந்த 24/01/2017 அன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பினராயி விஜயன் அளித்த பதில் வருமாறு.
இரு மாநிலங்களுக்கும் இடையே கடந்த 1988-ஆம் ஆண்டு பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்ப் பகிர்வு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஆண்டொன்றுக்கு 7.25 டிஎம்சி தண்ணீரை கேரளத்துக்கு தமிழகம் வழங்க வேண்டும். அந்தப் பாசன நீரை நம்பியே சித்தூர் விவசாயிகள் வேளாண்மை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை முதல் இதுவரை 4.275 டிஎம்சி தண்ணீரை மட்டுமே தமிழகம் வழங்கியுள்ளது. இதன் காரணமாக வரும் ஜூன் மாதத்துக்குள் மீதமுள்ள நீரைக் கேட்டுப் பெற வேண்டிய அவசியம் கேரளத்துக்கு எழுந்துள்ளது.
நிகழாண்டில் போதிய நீர்வரத்து தமிழகத்திலிருந்து கிடைக்காததால் சித்தூர் பாசன விவசாயிகள் கடும் வறட்சியை எதிர்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக தொடர் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக தற்போது விநாடிக்கு 400 கன அடி நீரைத் திறந்து விடுவதாக தமிழக அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
பரம்பிக்குளம் - ஆழியார் நீர்ப் பகிர்வு உடன்படிக்கை ஏறத்தாழ 30 ஆண்டு காலம் பழமையானது. எனவே, அதனை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. இதுகுறித்து தமிழகத்துடன் பல்வேறு தருணங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
நதி நீர்ப் பகிர்வு நடவடிக்கைகளை மறு பரிசீலனை செய்வது இரு மாநிலங்களுக்கும் நன்மை பயக்கக் கூடியது. சென்னையில் நடைபெறவுள்ள அரசுத் துறைச் செயலர்கள் கூட்டத்தில் இந்த விவகாரத்தை எழுப்பத் திட்டமிட்டுள்ளோம். பரம்பிக்குளம் - ஆழியாறில் இருந்து அதிக அளவு நீரைப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கேரள அரசு முன்னெடுக்கும் என்றார் பினராயி விஜயன்.

#ஆழியாறு_பரம்பிக்குளம்
#தமிழக_கேரள_நதிநீர்_பிரச்சனைகள்
#P_A_P_Project
#TN_Kerala_river_water_issues
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

30-01-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...