Wednesday, January 3, 2018

நாட்டைக் காக்க காஷ்மீர் எல்லைக்குச் சென்ற அன்புத் தம்பி ராஜேஸ் குமார் வீர மரணம்

நாட்டைக் காக்க காஷ்மீர் எல்லைக்குச் சென்ற அன்புத் தம்பி ராஜேஸ் குமார் வீர மரணம் அடைந்துள்ளார். அவர் கோவில்பட்டியின் எட்டையபுரம் அருகேயுள்ள சாத்துரப்பநாயக்கன்பட்டி (வங்கார்பட்டி) கிராமத்தினைச் சேர்ந்தவர். இவருடைய தந்தையார் பாலகிருஷ்ணன் – தாயார் சுலோச்சனா ஆகியோருக்கு பிறந்து 33 ஆண்டுகளாகிறது. 12 ஆண்டுகளாக இராணுவத்தில் பணியில் இருந்தார். 



இவருடைய தந்தையார் பாலகிருஷ்ணன் கோவில்பட்டி தொகுதியில் நான் போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் எனக்குப் பணியாற்றியவர். கடந்த 29ம் தேதி பனிச்சரிவில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணமடைந்தார். 

ராஜேஸுக்கு ஆனந்த நாயகி என்ற மனைவியும் ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். என்னை ஒரு முறை சென்னை வந்தபோது சந்தித்தார். அவருடைய சொந்த கிராமத்தில் நேற்று (02/01/2018) இராணுவ மரியாதையோடு நல்லடக்கம் நடந்தது. விவசாய குடும்பத்தை சேர்ந்த ராஜேஸ் குமாரின் குடும்பத்தாருக்கு இரங்கலும் அவருக்கு வீரவணக்கமும்.

#கோவில்பட்டி
#இராணுவ_வீரர்


*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
03-01-2018

1 comment:

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...