கோதை ஆண்டாள் சர்ச்சையில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தினமணி ஆசிரியர் நண்பர் கே.வைத்தியநாதன் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயருடன் சந்தித்தபின்னர் பிரச்சனைகளும், சர்ச்சைகளும் முடிவிற்கு வந்துவிட்டன. நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.
மதமும், அரசியலைச் சார்ந்த சர்ச்சைகளும் பல ஆண்டுகளாக நடந்து வந்துள்ளன. ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த போது துவாரகப் பீடாதிபதி காலைக் கழுவியதும், இந்திரா காந்தி சங்கராச்சாரியாரை சந்தித்த போதும் சில வினாக்களை எழுப்பியதும், 1975 அவசர நிலைக் காலத்தில் டெல்லி இமாம் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள், குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் அமிர்தசரஸ் பொற்கோவிலில் தண்டனையாக காலனிகளை துடைத்ததும், அயோத்தி பிரச்சனை, முதல்வராக இருந்த 1995 காலக்கட்டத்தில் ஜெயலலிதாவை கன்னிமேரி என்ற சென்னை கடற்கறைச் சாலையில் பேனர் வைத்த சர்ச்சை, குடியரசுத் தலைவராக கலாம் இருந்தபோது சங்கராச்சாரியாரை சந்தித்தது, இப்படியான பல பிரச்சனைகள் கடந்த காலத்தில் நடந்தேறின. மதசார்பின்மை (Secularism) என்பது சரியான பதம் அல்ல. மதநல்லிணக்கம் என்றே சொல்ல வேண்டும்.
பன்மையில் ஒருமை என்ற நிலையில் பல்வேறு மதங்களைக் கொண்டது இந்தியா.
•திருக்கோவிலில் ஆறுகால பூஜை நடக்க வேண்டும்.
•தேவாலயங்களில் மணியோசையோடு ஜெபங்கள் நடக்கட்டும்.
•மசூதிகளில் பாங்கோசையோடு தொழுகைகள் நடக்கட்டும், •குருத்துவாராக்களில் குரு கிரந்த சாகிப் செவிகளில் ஒலிக்கட்டும். •நாத்திகவாதிகள் இறைமறுப்புக் கொள்கைகளை சதுக்கங்களில் முழங்கட்டும்.
இது தான் ஆரோக்கியமான மத நல்லிணக்கம் எனப்படும்.
----
டெயில் பீஸ்
தமிழ் படைப்பாளிகள் ஆண்டாள் சர்ச்சை குறித்து அறிக்கை விட்டதில் திருவெம்பாவையை ஆண்டாள் பாடியதாக கூறியுள்ளார்கள். திருவெம்பாவையை பாடியவர் மாணிககவாசகர்.இதை அறிக்கை விடும் முன்னர் கவனிக்க வேண்டாமா? இதை குறித்து கல்கிப் பிரியனும் கீழ்கண்ட பதிவைச் செய்துள்ளார்.
//திருப்பாவை பாடியது ஆண்டாள்.. ஓகே...ஆனால் திருவெம்பாவையையும் ஆண்டாளே பாடியதாக எழுத்தாளர்களின் கண்டன அறிக்கை சொல்கிறதே! திருவெம்பாவையை பாடியவர் மாணிககவாசகர் அல்லவா! கையெழுத்து போட்டவர்கள் அறிக்கையை படிக்கவில்லையா?//
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23/01/2018
No comments:
Post a Comment