———————————————————
ஈழத்தமிழர் பிரச்சினையில் தீர்வு கிடைக்க ஐநா மனித உமை ஆணையத்தில் 46-வது கூட்டத்தில் அது குறித்தும் முடிவு எட்டப்படவும் அவர்களுக்கான நீதியும் தீர்வும் கிடைக்கவேண்டும். இலங்கைத் தமிழர்களை 2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் போரில் நடந்த இன அழிப்பு, மனித உரிமை மீறல், சிங்கள அரசின் பேரினவாதம், அரச பயங்கரவாதம், என்ற நிலையில் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட ரணங்கள் இது குறித்தெல்லாம் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் நடக்கும் 46-வது கூட்டத்தில் ஒரு நல்ல முடிவு எட்டப்படவேண்டும் என்பது அனைவரின் கருத்தாகும்.
1. ஈழத்தமிழர்களின் மனித உரிமை இன அழிப்பு குறித்து சர்வதேச சுதந்திரமான நம்பிக்கையான விசாரணைக்கு ஐநா மனித உரிமை ஆணையம் முன்னெடுக்கவேண்டும்
2. ஈழத் தமிழர்கள் விரும்புகின்ற அரசியல் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பு (Referendum) நடத்தவேண்டும்.
3. அதுவரை, வடக்கு கிழக்கு மாநிலங்களை இணைத்து மாகாண கவுன்சில்களுக்கு உரிய அதிகாரம் வழங்கவேண்டும்.
4. தமிழர்களுடைய விவசாய நிலங்களை அதன் உரிமையாளரிடம் திரும்பவும் ஒப்படைக்கவேண்டும். நில அபகரிப்பு குறித்தான வழக்குகளும் நீதிமன்றங்களில் அங்கு நிலுவையில் உள்ளன.
5. இறுதி போரில் 2009-ல் காணாமல் போனவர்களை உடனே கண்டறிய வேண்டும்.
6. முள்ளிவாய்க்கால் இறுதி போரின்போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும்.
7. இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்காக வழங்கிய புணர் வாழ்வு நிதியை தமிழர்களுக்கு பயன்படுத்தும் அளவில் திட்டங்களை முறைப்படுத்தவேண்டும்.
8. ஈழத்தமிழர் விதவைகள் புணர்வாழ்வும் உறுதிபடுத்தவேண்டும்.
ஐநா மனித உரிமை ஆணையத்தில் தொடர்ந்து என்னுடைய கருத்துகளையும், பதிவுகளையும் முன்னெடுத்து வருகின்றேன். தலைவர் கலைஞர் வேண்டி விரும்பி என்னிடம் திமுக, டெசோ சார்பில் ஈழத்தமிழர் உன் புரிதலைகொண்டு உரிய மனுவை ஐநா மனித உரிமை ஆணையத்தில் வழங்கி, முறைப்படுத்தி ஆவணப்படுத்தி வா என்று என்னிடம் கூறினார். அந்த வகையில் ஐநா பொது அவை சார்பில் நான் பதிவு செய்த என்னுடைய அறிக்கையை 13.2.2017 அன்று ஐநா மன்றம் தன் அறிக்கையில் முழுமையாக மூன்று பக்கத்திற்கு வெளியிட்ட அறிக்கையை கீழே வழங்கியுள்ளன். இது சாதாரண விஷயமல்ல. திமுகவின் டெசோவிற்கு தலைவர் கலைஞர் விருப்பத்திற்காக சாமானியனான நான் இந்த அசாதாரண செயலை திமுகவிற்கு செய்துள்ளேன், ஆனால் இன்று நான் யாரோ என்று தெரியவில்லை. இதெல்லாம் புரிதல்களுக்காவும் நினைவுப்படுத்தலுக்காகவும் செய்யவேண்டிய பதிவாகும். ஏனென்றால் பலருக்கும் ஞாபக மறதி அதிகம்.
இதுதான் நான் இதுதான் என் செயல்பாடு.




No comments:
Post a Comment