Wednesday, February 10, 2021

#தமிழ்_அறிஞர்_மகாவித்வான்_மீனாட்சிசுந்தரம்_பிள்ளை_நினைவு_நாள்


———————————————————-
திருச்சிராப்பள்ளி அருகே உள்ள எண்ணெயூரில், 1815 ஏப்ரல்., 6-ல் பிறந்தவர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை. சென்னையில் சபாபதி முதலியார், அம்பலவாண தேசிகர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களிடம், கல்வி பயின்றார்.
திருத்தலங்களின் வரலாற்றை விவரித்து, ஏராளமான தல புராணங்களை பாடினார். இவரிடம், உ.வே.சாமிநாத அய்யர், குலாம் காதர், நாவலர், சவுரிராயலு நாயக்கர் ஆகியோர், தமிழ் கற்றனர்.

திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர், இவருக்கு, ‘மகாவித்வான்’ என்ற பட்டத்தை அளித்தார். திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகத் திகழ்ந்தார். 19-ம் நூற்றாண்டில், தமிழில் அதிக நூல்கள் இயற்றியவர், இவர் தான்.
புராணம், காப்பியம், பிள்ளைத் தமிழ், அந்தாதி, கலம்பகம், தனிப் புராணம் உட்பட எண்ணற்ற நூல்களை இயற்றியுள்ளார். இரண்டு லட்சம் பாடல்களையும் இயற்றியுள்ளார். 1876 பிப்ரவரி 1-ல், தன் 61-வது வயதில் மறைந்தார்.
தமிழ் அறிஞர், மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை காலமான தினம் இன்று.
கே.எஸ். இராதா கிருஷ்ணன்
01.02.2021

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...