Wednesday, February 10, 2021

#சி_எஸ்

 · 

——————-
தமிழக அமைச்சர், மத்திய அமைச்சர், மஹாராஷ்டிர ஆளுநர் என கொங்கு மண்டலத்தில்பிறந்தசி.சுப்ரமணியத்தின் வயது நேற்றோடு 111, அவர் பிறந்த நாள் ஜவனரி 30.
பசுமைப் புரட்சி திட்டத்தை அவருடைய காலத்தில் கொண்டுவரப்பட்டது. அதன் தாக்கத்தால் நம்முடைய பாரம்பரிய மரபுரீதியான தற்சார்பு விவசாயம் சிதைந்தது. இருப்பினும் கல்வி, விவசாயம், அறிவியல் போன்ற துறைகளில் அவருடைய செயல்பாடுகள் அதிகம்.

எமர்ஜென்ச்சி முடிந்தபின் இந்திரா காந்தி பொது தேர்தலில் தோல்வியுற்றார், இந்திரா காந்தியுடன் நெருக்கமாக இருந்த சி.எஸ் இந்திராவை கைகழுவியதுண்டு. தமிழ்நாட்டில் காமராஜர் தலைமையில் இருந்த ஸ்தாபன காங்கிரஸ் இந்திர காந்தி இருந்த ஆளும் காங்கிரஸோடு இணைக்க நெடுமாறன் போன்றவர்கள் கடுமையான பணிகளை முன்னெடுத்தார்கள். நெடுமாறன், ஆர்.வி.சுவாமிநாதன், மகாதேவன் பிள்ளை போன்றவர்கள் தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டி தலைவராக முடியாமல் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டக் காங்கிரஸை ஜி.கருப்பையா மூப்பனார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்வதற்கு முழுமையான காரணம் சிஎஸ். அவரோடு மரகத சந்திரசேகர், நடிகர் சிவாஜி கணேசன், அவசர நிலை காலத்தில் அப்போது இருந்த நிலைகளும் நல்ல சூழல்களும் இருந்தும் மூப்பனாரால் காங்கிரசை தமிழகத்தில் வளர்க்க இயலவில்லை என்பது எதார்த்த உண்மை.
சிஎஸ்-க்கும் காமராஜருக்கும் ஏழாம் பொருத்தமாக இருவருக்கிடையே மௌன யுத்தம் எப்போதும் நடந்துகொண்டிருக்கும். இவரோடு பக்தவச்சலமும் இந்த நிலையில் உடனிருப்பார். அதையும் மீறி சி.எஸ்ன் ஆளுமை டெல்லியில் நீண்ட காலம் நிலைத்தது. 1977-க்கு பிறகு இந்திரா காந்தி இவர் மீதிருந்த நம்பிக்கையை இழந்தார் என்பது நெடுமாறனோடு இந்திரா காந்தியை சந்திக்கும் காலத்தில் இருந்து உணர முடிந்தது. இவர் நிதி அமைச்சராக இருந்தபொழுது ஷா கமிஷன் ரிசர்வ் வங்கி பிரச்சினையில் இந்திரவுக்கு எதிராக சாட்சி சொன்னார். இதெல்லாம் கடந்த கால நினைவுகள்.
கே.எஸ். இராதா கிருஷ்ணன்
01.02.2021

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...