Wednesday, February 10, 2021

#ஆளுமையான_அமார்த்திய_சென்_மீதா_நில_அக்கிரமிப்பு_புகாரா? #நில_ஆக்கிரமிப்பும்_அமார்த்தியசென்_கடிதமும்


———————————————————
மே.வங்கம்,விஸ்வபாரதி பல்கலைக்கழகம் அமைந்துள்ள சாந்தி நிகேதன் வளாகத்தில் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான ஏராளமான நிலங்களை நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரான அமார்த்திய சென் உள்ளிட்ட தனிநபர்களால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி மேற்குவங்க அரசுக்கு பல்கலைக்கழகம் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பரில் கடிதம் அனுப்பப்பட்டது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அமார்த்திய சென் வீடு அமஒந்துள்ள நிலத்தை அளக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று மீண்டும் பல்கலைக்கழக அதிகாரிகள் கடிதம் அனுப்பினர்.
தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் அமார்த்திய சென் தன் விளக்கத்தை விஸ்வபாரதி பல்கலைக்கழகம் துணை வேந்தர் வித்யுத் சக்கரவர்த்திக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,“நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டை நியாயப்படுத்த எந்த ஆவணத்தையும் பல்கலைக்கழக அதிகாரிகளால் அளிக்க முடியவில்லை. எங்கள் வீடு அமைந்துள்ள நிலத்தை அளக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசை பல்கலைக்கழக அதிகாரிகள் கேட்டுக்கொள்ளனர். விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திடமிருந்து நீண்ட கால குத்தகைக்கு எடுத்த நிலத்தைத் தவிர எங்கள் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் எனது தந்தையால் பல்கலைக்கழகத்திடமிருந்து அல்லாமல் வெளியாரிடமிருந்து வாங்கப்பட்டது, அதற்கான பஞ்சாயத்து வரிகளை நான் பல ஆண்டுகளாக செலுத்தி வருகிறேன்.
80 ஆண்டு கால ஆவணத்தின் மீது திடீரென குற்றம் சாட்டுவது துன்புறுத்தலுக்கான குரூரமான முயற்சியாகும். குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தை தவிர கூடுதல் நிலத்தைக் கண்டறிந்தால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவாளர் அச்சுறுத்துவது விஷமத்தனமானது. எனவே, நில ஆக்கிரமிப்பு புகாரை பல்கலைக்கழகம் திரும்பப் பெறவேண்டும்.”
மேற்கு வங்கத்தை கட்டுப்படுத்த நினைக்கும் மத்திய அரசின் உத்தரவின்பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர் செயல்படுகிறார் எனவும் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார்.
இவ்வாறு அக்கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இப்பிரச்சினையில் அமார்த்திய சென்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
22.01.2021

No comments:

Post a Comment

Pyramids of Meroe, Sudan

  Pyramids of Meroe, Sudan