Wednesday, February 10, 2021

#விவசாயிகள்_போராட்டம்_இன்றல்ல_நேற்றல்ல_அது_நீண்ட_நெடிய_வரலாறாகும்... #History_of_FarmersProtest


#History_of_FarmersProtest———————————————————-
டில்லியில் நடந்த விவசாயப் போராட்டம் தற்போது உத்தரபிரதேசத்தில் பாரதிய கிசான் யூனியன் தலைவரான ராகேஷ் திகாத்தின் அழுகுரலுக்கு பல அரசியல் கட்சிகள் செவிசாய்த்து ஆதரவளித்துள்ளன. இதன் பின்னணியில் உத்தரபிரதேச மேற்கு பகுதி மாவட்டங்களின் வாக்கு அரசியல் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதனால், டில்லியில் போராடி வரும் விவசாயிகளில் ஒரு பகுதியினர், தங்கள் நிலையிலிருந்து பின்வாங்கத் தொடங்கினர். இதன் தாக்கமாக, போராட்டம் நடந்து வரும் டில்லி எல்லைகளில் ஒன்றான காஸிபூரில் இருந்து விவசாயிகள் வீடு திரும்பத் தொடங்கினர். நேற்று முன் தினம் காஸிபூர் போராட்டக்களம் பெரும்பாலும் காலியானது.
இதன் காரணமாக, ராகேஷின் சொந்த ஊரான உத்தரபிதேச மாநிலம் முசாபர் நகரில் மஹா பஞ்சாயத்து கூட்டப்பட்டது. இதில், அம்மாநில மேற்கு பகுதி மாவட்ட விவசாயிகள் பலரும் கூடி ராகேஷுக்கு ஆதரவாக காஸிபூர் சென்று போராட முடிவு எடுத்தனர். பாரதிய கிசான் சங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உத்தரபிரதேச முசாபர் நகரில் மஹாவீர் சவுக்கில் நடத்திய மஹா பஞ்சாயத்தில் விவசாய சங்கங்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்ட நிகழச்சியில் உழவர் தலைவர், முன்னாள் பிரதமர், ஜாட் உழவர்களின் தந்தை என்றழைக்கப்பட்ட சரண்சிங் புதல்வர் முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். இந்த பேரணியில் பாரதிய கிசான் சங்கத்தலைவர் ராகேஷ் திகாத் கண்ணீர் விட்டு உரையாற்றினார். பின் இந்த மஹா பஞ்சாயத்து பேரணி முசாபர் நகரிலிருந்து காஸிபூர் நோக்கி சென்றது. மேற்கு உத்தரபிரதேசத்தில் ஜாட் இன மக்கள் தொகை அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சற்று பின்னோக்கி என்னுடைய நினைவுகளை திரும்பிப் பார்க்கிறேன். தமிழகத்தில் நாராயணசாமி நாயுடு நடத்தியப் போராட்டத்தின் தாக்கத்தால் உத்தரபிரதேசத்தில் திகாத்தும், மராட்டியத்தில் சரத் ஜோஷியும், ஆந்திரத்தில் செங்கல் ரெட்டியும், கர்நாடகத்தில் நஞ்சுண்ட ராவ், போன்றவர்கள் எல்லாம் விவசாய போராட்டத்தை அந்தந்த வட்டாரத்தில் நடத்தினர், இதற்கு முன்னோடியாக தமிழகத்தில் தான் உழவர் தலைவர் நாராயனசாமி நாயுடு முன்னெடுத்தார்.
அதன் பின் நன்றாக நினைவு இருக்கிறது, 1988-ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று லட்சக்கணக்கான விவசாயிகள் திகாத் தலைமையில் பாரதிய கிஷான் டெல்லி இந்தியா கேட் அருகிலும், போர்ட் கிளப் அருகிலும் கூடி போராடியது வரலாற்று நிகழ்வாகும். இந்திய வரலாற்றின் மாபெரும் அரசியல் திருப்புமுனையாக அமைந்தது.

விவாசாயிகள் அங்கே கூடி நீண்டநாட்கள் போராடிய போது தங்கள் உணவை தாங்களே சமைத்துகொண்டும், வட புலத்து நாட்டுப்புற பாட்டும் ஆட்டமும் நடந்ததை எல்லாம் பார்த்தது உண்டு. டிகைத் எனக்கு அறிமுகம் என்பதால் அந்த போராட்டக்களத்துக்கு இரண்டு நாட்கள் நான் பங்கு கொள்ள சென்று வந்தது எல்லாம் கடந்த கால நினைவுகள்.

அதன் பின், நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது புதிய பொருளாதார கொள்கை நடைமுறைப்படுத்திய போது அதை எதிர்த்து விவசாயிகளின் விலைப்பொருட்களுக்கு எளிமையான சந்தை வசதி ஏற்படுத்தி தரக்கூடிய திட்டங்கள் வழங்கப்படவேண்டும் என்று திகாத்து குழுவில் இடம்பெற்று பிரதமரை சந்தித்தது, அப்போது நீதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங்கும் உடனிருந்தார். என்பதெல்லாம் நினைவுகள்.

விவசாயப் போராட்டம் இன்றல்ல நேற்றல்ல விடுதலைப் போராட்ட காலத்தில் காந்தியார் முன்னெடுத்த வங்கம், பீகார் அவுரி விவசாயிகள் போராட்டம், கேரளத்தில் மலபாரில் நடந்த போராட்டம் என தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழகக்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நியாயம் கேட்டு திருநெல்வேலி ஆட்சித் தலைவரைப் பார்க்கச் சென்ற போது கடம்பூர் விவசாயி ஒருவர் துப்பாக்கி சூட்டில் பலியானது எல்லாம் வரலாற்று செய்தி.
விவசாயிகள் போராட்டம் இன்றல்ல நேற்றல்ல, அதற்கு நீண்ட நெடிய வரலாறுகள் உண்டு.

“*Tikait sits among the farmers, as he smokes hookah”, Delhi Boat Club Farmers Protest, 26 October 1988. *
“*More than 100,000 farmers demanding economic relief today occupied a grassy mall near Prime Minister Rajiv Gandhi's office for a second day, their numbers swelling as their leaders awaited a response from the government. OCT. 26, 1988*
'*This place is nice. I am enjoying the sunshine and have no plan to move until our demands are met,' said Mahinder Singh Tikait, the charismatic president of the Bharatiya Kisan Union, Hindi for the Indian Farmers Union, which organized the protest.*
*Tikait evaded questions on talks his aides held Tuesday evening with Textile Minister Ram Niwas Mirdha and Shyam Lal Yadav, a junior agriculture minister, who were presented with the farmers' demands for lower electricity rates, higher produce prices and cancellation of outstanding loan payments.*
But other senior BKU officials said they expected the government's response by evening and expressed optimism that Gandhi, who faces general elections that must be held by the end of next year, will concede their major demands.
'We are hopeful Gandhi will meet our demands,' said Somnath Tripathi, a BKU leader from the union's stronghold of Uttar Pradesh, an agriculturally rich state bordering New Delhi.
Gandhi and his Congress (I) Party are expected to face a tough challenge in the coming polls and can not afford to alienate India's farmers, who comprise more than 70 percent of the 800 million-strong population. The BKU charges Gandhi has ignored farmers' hardships and claims the agricultural sector needs economic relief because of a harsh drought last year, floods this year and the government's refusal to raise wholesale produce prices to keep pace with inflation. Meanwhile, thousands of new protesters were arriving aboard tractor-drawn wagons and vans to join the more than 100,000 farmers encamped since Monday at the Boat Club, a grassy mall less than a mile from the presidential palace and Gandhi's office.
Speakers addressing the crowd from a makeshift platform announced the arriving delegations, who were greeted with cheers and trumpet blasts. Thousands of police were deployed throughout the area, but maintained low profiles.
Police were unable to estimate the total number of protesters, most of whom were from Uttar Pradesh and other northern states, including Punjab and Haryana. Delegations also came from western Maharashtra and central Madhya Pradesh states.
A festive atmosphere pervaded the protest site, with many farmers sitting in groups and playing cards, gossiping or smoking hookahs. Several slept in the bright sunshine, while others strolled through the surrounding area, mingling with office workers and foreign tourists.
Most of the demonstrators spent the night under blankets in the open. Some built beds of straw beneath their vehicles, the sides of which they drapped with long clothes to guard against a chilly night breeze.
The BKU first unveiled its demands two years ago, and in January thousands of farmers staged a 25-day sit-in protest in the Uttar Pradesh city of Meerut, 40 miles northeast of New Delhi.” Oct 1988.
Photos-
Farmers gathered around the body of a farmer who had lost his life during the 1988 farmers protest at the Boat Club in Delhi.
A group of farmers playing chaupar (a board game) in the lawns of the Boat Club, 1988.
(Photograph by Praveen Jain.)
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
30.01.2021

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...