Saturday, June 10, 2023

சொல்லி கொள்வது பகுத்தறிவு… என அரசியல் வியாபாரம்….

இதயத்துடிப்பே, இன்ப மூச்சே
இளம் சிங்கமே, இருமல் மருந்தே, 
உறங்கா புலியே, உழைப்பின் சிகரமே, ஓய்வில்லா சக்கரமே, உளுந்தம் பருப்பே, அன்பகத்தின் அமுதே,  செம்மொழி செல்லமே, அகிலம் புகழும் அதிசயமே, பாயசத்தின் வெல்லமே, சாம்பாரின் வெங்காயமே....... 

இப்படியெல்லாம் - சமயத்தில்  தப்பும் தவறுமான தமிழில் - வார்த்தைகளில்,  ராட்ச பேணர்கள்  ரோட்டை அடைத்து குறுக்கும் மறுக்குமாக கட்சிக்கொடி தோரணங்களோ, பிரமாண்ட வரவேற்பு வளைவுகளோ, பகட்டையும், பணத் திமிரையும் ஊருக்கு  காட்டும்  மேடை அலங்காரம,…. பகட்டு, போலித்தனம், பாசாங்கு…

கட்சி  (கரை)வேட்டிகளும், கூட்டணி கட்சியினரின் கூட்டமும் எதிர்கட்சியினரை கீழ்தரமாக 
திட்டி தரமற்ற அரசியல் பேசும் அலம்பல்..
Paid மீடியாக்களின் வெளிச்சம் ஆடம்பரத்தையும் காட்டல்…
ஆனால் சொல்லி கொள்வது பகுத்தறிவு… என அரசியல் வியாபாரம்….
இவையற்ற அரசியல்தனம் வேண்டும்… அதுவே அரசியல்-ஜனநாயக மாண்பு…
 இது எங்கே புரியப்போகிறது!!

No comments:

Post a Comment

அதிகாரம் நிரந்தரமில்லை. ‘’ Quality is not an act, it is a habit.”

‘’ Quality is not an act, it is a habit.”   ஞானபீடம் எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்லுவார். “வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம் தான்” மிகச் ...