Wednesday, August 14, 2024

#காவேரி

 #காவேரி

—————

“#இனிமேல்_கர்நாடகாவிடம்_காவேரிநதிநீரை_வேண்டிப்பெறுவது_தற்கொலைக்குசமமானது” என்று #துரைமுருகன் கூறியுள்ளார். பிறகு எதற்கு இந்தியா கூட்டணியில் இவர்கள் இணைந்து இருக்கிறார்கள். 

கர்நாடகாவில் காங்கிரஸ்தானே ஆட்சியில் இருக்கிறது! அப்போது அந்த இந்தியா க் கூட்டணியும் தற்கொலை முயற்சி தானா? 

கர்நாடகத்தில் வெள்ளம் என்றால் தஞ்சை டெல்டாவை இன்று போல் அதன் வடிகாலாக இன்று புனல் பெருகி ஓடும்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.!பக்கத்தில் கேரள மாநிலம் அங்கும் முல்லைப் பெரியாறு விஷயத்தில் பிரனாய் விஜயன் தொடர்ந்து தகராறு செய்து வருகிறார் அணையைக் கட்டுவேன் இடிப்பேன் என்கிறார். அங்கே வயநாடே ஏராளமான உயிர் இழப்புகளோடு தரைமட்டம் ஆகிக் கிடக்கிறது. என்ன நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறார்கள்! 

மனச்சான்று இல்லாத ஏதோச்சதிகார முடிவுகளை வைத்துக்கொண்டு தனியார் லாபங்களுக்குத் துணை போகும் இந்த அரசுகள் இன்னும் நீடிப்பது தான் மிக மோசமாக இருக்கிறது.

தொடர்ந்து போராடி நதிநீர் உரிமையை பெற்றுத் தமிழக மக்களுக்கு தருவதை விட்டுவிட்டு தற்கொலை முயற்சி என்றெல்லாம் பேசுவது எவ்வளவு அபத்தம்! இதன் மூலம் அவர்கள் சொல்ல வருவது எங்களுக்கு நதிநீர்த் தாவாக்களுக்குச் செல்வதை விட வேறு வேலைகள் இருக்கிறது என்று சொல்கிறார்களா!

அண்டை மாநிலங்களில் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டு அவற்றிடம் இருந்து உரிமையை பெற்றுத்தர மட்டும் மத்திய அரசிடம் முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாநிலங்களுக்கு அதிக உரிமை வேண்டும் என்று கேட்பதற்கு இவர்கள் அனைவருக்கும் என்ன யோக்கியதை இருக்கிறது. கைக்கு அருகே உள்ள பிரச்சனையைத் தீர்க்காமல் காசிக்கு போய் என்ன ஆகப்போகிறது? 

ஒரு புண்ணியமும் கிடைக்காது!

அகன்ற காவேரி ஆறு, 

தமிழ் நிலத்தை செழிப்புடன் 

அலங்கரிக்கட்டும்.. 

விவசாயிகள் வாழ்க்கை மேம்படையட்டும்..

உற்பத்தி மற்றும் ஆதாரவிலை விவசாயிகளுக்கு நியாயமான உரிமைகள் கிடைக்கட்டும்..என்பது நமது விருப்பம்.

ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் நிலை…⁉️

#காவேரிபிரச்சனை

#CauveryriverIssue

#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

3-8-2024.

(படம்- காவேரி,இன்று  

நன்றி

Kandasamy R)

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...