Wednesday, August 14, 2024

எத்தனையோ திறமைகள் இருந்தும், அத்திறமைக்கேற்ற வெற்றியை

 

எத்தனையோ திறமைகள் இருந்தும், அத்திறமைக்கேற்ற வெற்றியை அடையாத நபர்களைப் பார்த்திருப்போம். "காலம் அவர்களுக்கு வெற்றியைத் தராதா?" என்று மனதிற்குள் அவர்களுக்காகப் பிரார்த்தித்திருப்போம். 

அப்படிப்பட்ட ஆளுமைகள் வெற்றி இந்த பூமிக்கு வேண்டுமென்று விரும்புகிறேம். 

நம்மால முடிஞ்ச விஷயத்துக்கு கடைசி வரை போராடுற ஜாதி நான்! அதையும் மீறி நம்மளைத் தாண்டின விஷயம், நடக்கும் போது கடவுளைச் சரணடையறது தவிர வேறு வழியில்லை. 

சரண்டர் ஆகி தவிக்கறதை விட, இறைவன்/ இயற்கை

நிக்கறதுதான் உசத்தியான விஷயம்! 

 வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையும் ஒரு கற்றல் செயல்முறை மற்றும் அனுபவமாகும், இது வளர்ச்சிக்கான அற்புதமான வாய்ப்புகளைத் தரும் .  ஒவ்வொரு நாளும் நீங்கள் கற்றல் மற்றும் முடிவுகளை எடுப்பதற்கும் அவர்களுடன் வாழ்வதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.  வாழ்க்கை என்பது ஒரு தொடர்ச்சியான மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் செயல்முறை என்பதை ஏற்றுக்கொள், உங்களை மேம்படுத்திக்கொள்ள விரும்பினால், விமர்சனத்தை எப்படி எடுத்துக்கொள்வது என்பதை கற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானது. அதைத் தழுவி, தினமும் வளருங்கள். விளைவு சரியோ தவறோ என்று பயப்படாதீர்கள், நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள் என்று நம்புங்கள்.  நீங்கள் கற்றுக்கொண்டால், நீங்கள் தினமும் வெற்றி பெறுகிறீர்கள். 

நாம் கருத்துகளின் உலகில், சிந்தனையின் உலகில் வாழ்கிறோம்.

நம்முடைய எல்லா பிரச்சனைகளையும் - மிகவும் மேலோட்டமான பிரச்னை என்றாலும், மிக ஆழமான உளவியல் பிரச்சனைகள் என்றாலும் - சிந்தனையின் மூலம்  நாம் வெற்றி பெற முயற்சிக்கிறோம்.

நமது மனிதப் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க நாம் பயன்படுத்த வேண்டிய ஒரே கருவி சிந்தனை தானா? 

எப்பவும் பிளாஷ்பேக் ஓட்டிப் பாக்கறது நல்லவிஷயம்! நாம் செஞ்ச நல்ல விஷயம்... இன்றைய நம் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டிருக்கறதும் தெரியும். நாம செஞ்ச கெட்ட விஷயங்கள்... இன்னிக்கும் ஏதோ சில விஷயங்களுக்கு ஒரு வேகத்தடை போட்டு, காரியம் சாதிக்க விடாம செய்றதையும் புரிஞ்சுக்க முடியும். 

நான் செஞ்ச கெட்டவிஷயங்களுக்கான 

மிகப்பெரிய மன்னிப்பை எப்பவோ கேட்டுட்டாலும் 

இப்பவும் ஒருமுறை கேட்டுடணும்னு மனசு சொல்லுது! 

தீதும் நன்றும் பிறர்தர வாராங்கறதை நம்பறவன் நான். 

சிலருக்கு நான் ஆச்சரியக்குறி!

சிலருக்கு நான் கேள்விக்குறி!

சிலர் என்னுடன் என்றுமே முற்றுப்புள்ளி .

 #ksrpost

 11-8-2024.

No comments:

Post a Comment

#அன்றைய மெட்ராஸ்ராஜதானி,

  #அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் # தமிழ்நாடு 68* #நவம்பர்1 தமிழ்நாடு நாள் (பெற்ற -பிறந்த நாள்)உதயமான ந...