Thursday, August 15, 2024

#காவேரி #மேட்டூர்அணை

 #காவேரி #மேட்டூர்அணை

#cauvery #metturdam

மக்களுக்கு புரியறா மாதிரி சொல்லுங்க.. அணையின் நீர்மட்டம் இத்தனை அடிக்கு உயர்ந்தது என்று கூவு கூவுவென்ற கூவுவார்களே தவிர, கொள்ளளவு எவ்வளவு தற்போதைய இருப்பு எவ்வளவு என்பதை மட்டும் பெரும்பாலும் சொல்லவே மாட்டார்கள். என்றைக்கும் அப்படித்தான், இத்தனை அடி உயர்ந்தது அத்தனை அடி உயர்ந்தது என்று ஒரே அடி புராணம்தான். ஒரு அணையை, அதன் பிரமாண்டத்தை விவரிக்கும் முக்கிய அம்சம் என்னவென்றால் அதன் கொள்ளளவு தான். இந்த அதிமுக்கிய விஷயம் மட்டும் ஏனோ செய்தியை எழுதுபவர்களுக்கு விளங்கவே மாட்டேன்ங்கிறது. கர்நாடகாவின் மைசூரில் உள்ள 124 அடி கிருஷ்ணராஜ சாகர் எனப்படும் கேஆர்எஸ் அணையின் மொத்த கொள்ளளவு 45.4 டிஎம்சி. ஆனால் அதைவிட நான்கு அடி உயரம் குறைவான மேட்டூர் அணை, 120 அடிக்கு தேக்கி கொள்ளும் நீரின் முழுகொள்ளளவு 93.4 டிஎம்சி. அவ்வளவு ஏன்? சோலையாறு அணை 160 அடி உயரம் ஆனால் கொள்ளளவு வெறும் 5 டிஎம்சிதான்.. பவானி சாகர் 105 அடி, கொள்ளளவு 32 டிஎம்சி. ஆனால் 119 அடி கொண்ட சாத்தனூர் கொள்ளளவு 7.3 டிஎம்சி அணையின் மொத்த கொள்ளளவு, தற்போதைய நீர் இருப்பு இதுதான் எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம். அதைவிட்டுவிட்டு ஒரே நாளில் எட்டடி உயர்ந்தது என்று
#பரபரப்பு காட்டுவதால் பலனில்லை. அணையை பொறுத்தவரை தரைமட்ட உயரத்திலிருந்து மேலே போகப்போக நீர்தேங்கும் பரப்பளவு அதிகமாகும், கீழே கிடுகிடுவென பத்தடி உயர வெறும் ஒரேயொரு டிஎம்சி தண்ணீரே போதுமானதாக இருக்கும், அதே அணையில் மேலேபோகப்போக, ஒரு அடி உயரவே ஒரு டிஎம்சி ப்ளஸ் தண்ணீர் தேவைப்படும். உதாரணத்திற்கு, 120 அடி #மேட்டூர் அணையில் 60 அடி என்பது பாதி உயரம். முழுக்கொள்ளளவு 93 டிஎம்சி என்றால் ‘’அறிவாளிகள்’’ கணக்குப்படி 41.5 டிஎம்சி இருக்கவேண்டும். ஆனால் மேட்டூர் அணையில் 60 அடி நீர்மட்டம் #என்றால் 25 டிஎம்சி நீர்தான் இருப்பு இருக்கும் என்பதே உண்மை. இன்னும் புரியிற மாதிரி சொல்லுவோம். 60 அடிக்கு 25 டிஎம்சிதான் 70 அடிக்கு போனா 33 டிஎம்சி 80 அடி 41 டிஎம்சி 90 அடி 50. டிஎம்சி 100 அடி 64 டிஎம்சி 110 அடி 76 டிஎம்சி 115 அடி 85 டிஎம்சி 120 அடி 93.4 டிஎம்சி மேட்டூர் அணை 100 அடியை தொட்டது 100 அடியை தொட்டது என்று #கூப்பாடு போடுவார்கள். ஆனால் அணையில் 100அடிக்கு நீர் இருப்பு 64 டிஎம்சி தண்ணீர்தான். அதிகபட்சமான 120 அடியை தொட, மேற்கொண்டு 20 அடி உயரவேண்டும். அந்த வெறும் 20 அடிக்கு 30 டிஎம்சி நீர் வேண்டும். அதாவது மூன்றில் ஒரு பங்கு இன்னும் சொல்லப்போனால் அணையின் கொள்ளளவில் எவ்வளவு சதவீதம் நீர் இருப்பு சொன்னால் தெளிவாக விளங்கிவிடும்

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...