Thursday, August 15, 2024

சொந்த குரலில் பாடி நடித்த பழம்பெரும் நடிகை #எஸ்_வரலட்சுமி

 சொந்த குரலில் பாடி நடித்த பழம்பெரும் நடிகை #எஸ்_வரலட்சுமி 


தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் நடிகை எஸ். வரலட்சுமி. 

எஸ். வரலட்சுமி ஆந்திராவில் உள்ள ஜக்கம்பேட்டையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி 1927 ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை மற்றும் பின்னணிப் பாடகி எஸ். வரலட்சுமி. இவர் நடிப்பில் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன், சவாலே சமாளி மற்றும் தெலுங்கில் மகாமந்திரி திம்மரசு, வேங்கடேசுவர மகாத்மியம் ஆகிய திரைப்படங்கள் மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்ற படங்கள் ஆகும். குணா, கந்தன் கருணை, வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய திரைப்படங்களில் பாடல்களும் பாடியுள்ளார்.




நடிகை எஸ். வரலட்சுமி சிறுவயதிலிலேயே பாலயோகினி என்ற திரைப்படத்தில் நடிக்க துவங்கினார். இவர்1938-ம் ஆண்டு கே. சுப்பிரமணியம் தயாரித்த "சேவாசதனம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தெலுங்கில் நாகேஸ்வரராவ் உடன் "பால்ராஜ்' படத்தில் அறிமுகமானார். ஏவிஎம்-ன் "ஜீவிதம்' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.


திரைப்படத் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான ஏ.எல். சீனிவாசனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு முருகன் மற்றும் நளினி என இரு குழந்தைகள் உள்ளனர். ஒரு பேரனும் ஒரு பேத்தியும் உள்ளனர். திருமணத்திற்கு பின்னரும் தமிழ்,தெலுங்கு திரைப்படங்களில் வயதான வேடங்களில் நடித்து வந்தார். தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் நடிகை எஸ். வரலட்சுமி.


இவர் பாடிய 'இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்....' என்ற பாடல் மிகப் புகழ்பெற்றது.அதேபோல குணா படத்தில் கமல்ஹாசனின் தாயார் வேடத்திலும் நடித்து ஒரு பாடலையும் பாடியிருந்தார் வரலட்சுமி.


இவர் தமிழில், சுவப்னசுந்தரி (1950), எதிர்பாராதது (1954), சதி சக்குபாய் (1954), மாங்கல்ய பலம் (1958), சத்ய அரிச்சந்திரா (1965), ஆபூர்வ பிறவிகள் (1967), குணா (1992) வீரபாண்டிய கட்டபொம்மன், கந்தன் கருணை, ராஜராஜ சோழன், பூவா தலையா, சவாலே சமாளி, நினைத்ததை முடிப்பவன், நீதிக்குத் தலைவணங்கு, மாட்டுக்கார வேலன், பணமா? பாசமா?, அடுத்த வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ளார்.


இவர் தெலுங்கில், கனகதாரா, கோடாரிகம், லாயர் சுகாசினி, மாமாகாரம், சதி துளசி,பொம்ம பொருசா (1971),ஸ்ரீ கிருஷ்ணார்ச்சுன யுத்தம் (1963),மகாமந்திரி திம்மரசு (1962),ஜீவிதம் (1949),பாலயோகினி (1936) போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் கலைமாமணி விருது, கலைவித்தகர், கவிஞர் கண்ணதாசன் விருது (2004), சிவாஜி கணேசன் நினைவுப்பரிசு போன்ற பல விருதுகளை வாங்கியுள்ளார்.


சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த வரலட்சுமி, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் மருத்துவமனையில் அன்று இரவு தமது 82 ஆவது வயதில் காலமானார்.

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...