Wednesday, September 4, 2024

நான் சின்ன வயசுல இருக்கும் போது கோழி மேய்ச்சிட்டு இருந்தேன் .. பக்கத்து வீட்டு பாட்டி அதை புடிச்சு சூப்பு வச்சுட்டாங்க.

 நான் சின்ன வயசுல இருக்கும் போது கோழி மேய்ச்சிட்டு இருந்தேன் .. பக்கத்து வீட்டு பாட்டி அதை புடிச்சு சூப்பு வச்சுட்டாங்க. 


அப்பலாம் கலர் சாயம் பூசப்பட்ட லகான் கோழிகும்ஞ்சுகள் 1 ₹ தான் ஒரு டசனாக வாங்கினால் 10 ₹ க்கு தருவாய்ங்க .பார்க்க ரொம்ப அழகா இருக்கும் .


ஆனா அந்த பத்து ரூபாயை  தர்றத்துக்கே எங்கப்பா மூக்கால அழுவாரு .. அவரோ பாவம் சாதாரணமா ஒரு சொந்த கடை வச்சு பிசினஸ் பண்ணிட்டு இருந்தார். அதனால வீட்ல ரொம்ப கஷ்டம்.


அப்டியிருந்தும் நான் வருத்தபட கூடாதுன்னு பத்து ருபாய்க்கு 12 கோழி கும்சுகள் வாங்கி குடுத்தாரு .. நானும் ரொம்ப ஆசையா அதையெல்லாம் மேய்ச்சிட்டு இருந்தேன் ..  


அப்போ திடீர்னு ஒரு நாள் ஒரு  பூனை வந்து என் நாலு கோழி கும்ஞ்சை கவ்விட்டு போயிடுச்சு .அந்த பூனையை வளர்த்தது அந்த பக்கத்து வீட்டு பாட்டி தான்.


உங்க பூனை இப்டி பண்ணிடுச்சேன்னு போய் கேட்டேன் அதுக்கு அந்த பாட்டி என் பூனை அப்டி தான்டா கவ்விட்டு போகும்னு ஆணவமா பதில் சொல்லி திட்டி அடிச்சு அனுப்பிட்டாங்க.. 


அந்த பாட்டியோட பேரன் சாய்ந்தரம் என் கூட விளையாட வந்தான் அப்போ பேச்சு வாக்குல யார்யார் என்னென்ன சாப்டோம்னு பேசிகிட்டு இருந்தோம் .. 


அந்த பாட்டியோட பேரன் ,, இன்னைக்கு எங்க வீட்ல சிக்கன் சூப்பும் குர்மாவும் எங்க பாட்டி செஞ்சி குடுத்தாங்கன்னு சொன்னான் ..


அப்ப எனக்குள்ள எழுந்த அந்த 

வலி இருக்கே வலி …..அதை 

வார்த்தையால் சொல்ல முடியாது.



எங்கோ படித்தது….

No comments:

Post a Comment

அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு..

 அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு.. அப்புறம் சிங்கப்பூர் முதலீடு ஈர்ப்பு.... பின் ஜப்பான், இப்போது அமெரிக்கா முதலீடு ஈர்ப்பு  கார் ரேஸ் என….. ஆன...