Wednesday, September 4, 2024

அமைச்சர் தண்டராம்பட்டு எ வ வேலு கலைஞர் பற்றி ஒரு நூல் எழுதி அதை இன்று வெளியிடுகிறார்.

 அமைச்சர் தண்டராம்பட்டு எ வ வேலு கலைஞர் பற்றி ஒரு நூல் எழுதி அதை இன்று வெளியிடுகிறார்.



இந்த நூல் வெளியீட்டு விழாவில் குன்றக்குடி அடிகளார் கலந்து கொள்கிறார். குன்றக்குடி அடிகளைப் பற்றி பொதுவாகத் தெரியும்! அவர் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்வார். திரை நடிகர்

 ரஜினிகாந்தும் கலந்து கொள்கிறார். இப்படியானவர்கள் எல்லாம் கலந்து கொள்ள அதை விழா நடைபெறுகிறது. 


இதே தண்டராம்பட்டு வேலு எம்ஜிஆர் காலத்து அதிமுகவில் எம்எல்ஏவாக இருக்கும் பொழுது அவர் கலைஞர் குறித்து பேசிய பேச்சுக்கள் இன்னும் சட்டமன்றக் குறிப்புகளில் இருக்கின்றன.


அன்று கலைஞருக்கு எதிர்வினையாகப் பேசிய பேச்சுக்களை எடுத்துக் கொள்வதா? இல்லை இன்று கலைஞர் பற்றி அவர் நூல் எழுதி வெளியிடுகிறாரே  இதை ஏற்றுக் கொள்வதா?


இந்த இரண்டுக்கும் இடையே எதைச் சமன்பாடு என்று ஏற்றுக் கொள்வது? அல்லது இப்படி எல்லாம் நடப்பதை எப்படி எடுத்துக் கொள்வது? தண்டராம்பட்டு எ வ வேலு நடிகர் பாக்கியராஜ்வின் நெருங்கிய நண்பர். இதை போலவே வேலு ஜெயல்லிதாவை பற்றி ஆங்கிலத்தி புத்தகம் போட்டு அது

வெளியிடவில்லை 1990களில் என தகவல்.


#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

24-8-2024.

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...