#விஜய் #தமிழகவெற்றிக்கழகம்
————————————
நேற்று முன்தினம் 22-8-2024, நடிகர் விஜய் தான் தொடங்கிய அரசியல்க் கட்சியை தமிழக வெற்றிக்கழக தனது கட்சிக்கான கொடியை பொது மக்கள் முன்பு அறிவித்தார். கூடியிருந்த அநேக கூட்டத்திற்கிடையேஅறிமுகப்படுத்
தினார். இன்றைய தமிழ்நாட்டு தேர்தல் அரசியல் சூழலில் விஜயின் அரசியல் வருகை கவனிக்கத்தக்கது. வழமையான கேலி, கிண்டல், மீம்கள் மூலம் இதனை கடந்துவிட முடியாது.
தனது கொடியில் உள்ள வண்ணங்கள் மற்றும் இலட்சினைகளைப் பற்றியும் கட்சிக் கொள்கைகள் பற்றியும் விரைவில் தொடங்க இருக்கும் விக்கிரவாண்டி மாநாட்டில் தெரிவிக்க இருப்பதாக கூறியுள்ளார்.
1960களில் வலிமையாக இருந்த காங்கிரசை திமுக வீழ்த்தியபோது அந்த திமுகவை வீழ்த்த எம்ஜிஆர் பயன் பட்டார்.அவரின் திரைக்கவர்ச்சி வள்ளல் தன்மை மூலம் அதிமுக உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று திமுகவை அரியணையில் இருந்து இறக்க தவெக வந்துள்ளது .
இது ஒரு நல்ல தொடக்கம் என்று கருதுகிறேன். நல்லதும் தீயதும் நம் எண்ணங்களாலும் செயல்களாலும் பெறப்படும் ஆனால் உடனே விஜய் மீது திட்டமிட்ட எதிர் வினைகள். இந்த செயதி புறந்தள்ள தமிழக அமைச்சர் அவை மாற்றம் என தவறான செய்திகள் தொலைகாட்சிகள் சொன்னது… அவரின் கொடிய குறித்த விமர்சனங்கள் என 48 மணி நேரத்தில் திசை திருப்பல்கள என நடந்தன…..⁉️
ஒரு காலத்தில் எம்ஜிஆர் கட்சியை விட்டு நீக்கப்பட்டவுடன் தான் என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்தார். திண்டுக்கல் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின் மிகத் தீவிரமாக அண்ணா திமுகவை வளர்த்தெடுத்தார். மக்களின் ஆதரவும் செல்வாக்கும் அபரிமிதமாக அவருக்கு இருந்தது. ஏகோபித்த ஆதரவுடன் அவர் ஆட்சியைப் பிடித்தார்.
அதேபோல் ஆந்திராவில் என்டி ராமராவ் அவர்கள் அன்று ஒன்றுபட்டிருந்த ஆந்திராவில் கட்சி ஆரம்பித்து சுற்றுப்பயணம் செய்து ஆறே மாதத்தில் ஆட்சியைப் பிடித்தார்.
அதேபோல் தமிழ்நாட்டில் எது வேண்டுமானாலும் நடக்கக்கூடிய சூழல் இருக்கிறது. நிச்சயமும் நேர்கோட்டுப் பயணமும் நீதியும் மக்களிடையே செல்வாக்கும்இருக்கக்கூடியவர்களுக்கு இது சாத்தியம்தான். அதே சமயம் ஓமந்தூரர்,ராஜாஜி,காமராஜர், அண்ணா,கலைஞர், எம்ஜிஆர் போன்ற பெரிய கரிஷ்மா உள்ள தலைவர்கள் இன்று யாரும் இல்லை. இப்போதான் ஆட்சியில் இருப்பவர்கள் உட்பட யாருக்கும் அந்த கரிஷ்மா இல்லை.
அரசியலைப் பொறுத்த வரையில் இவர்கள் பின்பற்றத்தக்கவர்களோ பொருட்படுத்தத்தக்கவர்களோ இல்லை. என்பதுதான் கூர்ந்த அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.
அதே வேளையில் இதற்கு முன்பு எம்ஜிஆர்-கலைஞர்,அதிமுக-திமுகவை எதிர்த்து இப்போது வரை கட்சி தொடங்கியவர் பலரும் செல்வாக்குப் பெற முடியவில்லை.
காரணம் அவர்களிடம் திட்டமிட்ட நோக்கமோ பயணமோ உறுதியான பார்வையோ இல்லை !.
ஆனால் நடிகர் விஜய்யைப் பொருத்தவரை அவர் கடந்த 30 ஆண்டுகளாக மேலாக மக்களிடையே மிகவும் அறிமுகம் பெற்றவராக வீட்டுத் தொலைக்காட்சியில் வீடுகளில் அடிக்கடி வந்தவராக எல்லோருக்கும் அறிமுகமானவராக தன் படங்களில் கூட அரசியல் சரி நியாயங்கள் குறித்த தீவிரமான காட்சிகளை அமைத்தவராக நடித்தவராக செல்வாக்கு பெற்று இருக்கிறார். அதன் வழியே புதிய இளைஞர்களின் மனம் கவர்ந்தவர் ஆகவும் இருந்து ஒரு ஆல்டர்நேட்டிவ் அரசியல் பார்வையை மக்களிடம் சினிமா எனும் கலை சார்ந்தும் அரசியல்ப் பூர்வமாகவும் அன்பாகப் பெற்றவர்! அந்த முறையில் அவருக்கு அதிகம் அறிமுகம் தேவை இல்லை ன். அரசியல் களத்தில் விஜய்க்கும் எம்ஜிஆருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஆனால் இரண்டு பேருக்கும் சில ஒற்றுமைகளும் உள்ளன. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களிடம் இருக்கும் நீண்டகாலமான நெருக்கமான அறிமுகமும் தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமங்கள் வரை இருக்கும் ரசிகர் மன்றமும் அவற்றில் ஒன்று.
பிறகும் இன்றைய நேர்மையான புது மாற்று அரசியலை விரும்புபவர்களுக்கு அவர் ஒரு புதிய ஆற்றல் உள்ள அத்துடன் மக்கள் செல்வாக்கும் உள்ள புதிய நவீன மனிதராகவும் இருக்கிறார்.
தமிழகத்தின் மேற்தட்டு மக்கள் முதல் அடித்தட்டில் குடிசையில் வாழும் மக்கள் வரை அவர் தொடர்ந்து அறிமுகமானவராகவும் மிக நெருங்கியவராகவும் குடும்பத்தில் உள்ள ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் தெரிந்தவராகவும் ஒரு இணக்கமான முகத்தைக் கொண்டவராகவும் இருக்கிறார். எம்ஜிஆர் அன்று செய்த தேர்தல் அரசியல் அதிசயத்தை இன்று விஜய் செய்ய முயற்சி எடுக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெறுமா இல்லையா என்பது வருங்காலங்களில் அவரது செயல்பாட்டினைப் பொறுத்தது.
அத்துடன் அவருக்கு கர்நாடகா தெலுங்கானா கேரளா போன்ற பிற மாநிலங்களில் கூட செல்வாக்கு உண்டு. அகில இந்திய அளவிலும் கூட நடிகர் விஜய் என்று அறியப்பட்டவர்.
மேற்கண்ட அடிப்படைகள் அவருக்கு ஒரு வகையில் சாதமாக இருக்கிறது
எனும் போது இனி அவர் செய்ய வேண்டியது! தனது கட்சிக்கான கொள்கைகள் மற்றும்1/2
மக்களுக்கான நலத்திட்டங்கள் போக இதுவரை அரசியல் அமைப்புகளின் இருந்து வரும் கோளாறுகளை நீக்கக்கூடிய வழிவகைகளை மக்களின் முன்பு வைத்து தனது செயல் திட்டங்களை அறிமுகப்படுத்துவது தான். அறிவு உணர்ச்சி கலை நீதி சமத்துவம் இவற்றில் உண்டாகும் அறங்களை மக்கள் மயப்படுத்த வேண்டியது அவரது கடமையாக இருக்கும்.
குறிப்பாக இன்று பணம் பெற்றுக் கொண்டு ஓட்டு வாங்கும் முறையை அவர் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பது ஒரு முக்கியமான விஷயமாக இருக்கும். ஆண்ட பரம்பரை அவர்கள் இவர்கள் நாங்கள்தான் ஆள வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வந்திருக்கக்கூடிய ஒரு பெரும் வாரிசு க் கூட்டத்தைச் சமாளிக்க வேண்டியது வரும்.
இன்றைக்குள்ள நிலையில் பெருமளவு பொருளாதாரம்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது! அது அதிகமாக தேவைப்படுகிற சூழலில் தான் அரசியல் பணத்தில் கூலி பெறும் சமூக ஊடகங்கள், புகழ்பாடும் பத்திரிகா தர்மற்ற தினசரிகள்- தொலைகாட்சிகள் ஆட்சிகளும் தந்திரமாக அமைகிறது. அந்த வகையில் ஓட்டுக்குக் காசு வாங்கிக் கொண்டு வாக்களிக்கிற மக்கள் முறையை எதிர்கொள்வதில் நடிகர் விஜய்க்கு சிரமம் இருக்கலாம்.
மிகப்பெரிய தொகை செலவு செய்ய முடிந்தவர்கள் தேர்தல் அரசியலுக்கு வரமுடியும் என்ற நிலை. தேர்தல் அரசியல் என்றால் 5000 கோடி செலவு செய்யும் திராணி இருந்தால் கட்சி தலைமை தேர்தலில் போட்டியிடலாம். அப்படியான மோசமான நடைமுறைகளைத் தாண்டி அதை நீக்க அவர் மக்களைச் சந்தித்து தமிழகத்தின் உண்மையான பிரச்சனைகள் என்ன என்பதை கணக்கெடுத்து அதை தனது அரசியல் பணியாக முன்வைப்பார்! அதன் மூலம் தனது தனித்த செல்வாக்கால் தகுதியான ஆலோசனைகளுடன் கட்சிக்கான வெற்றி வாய்ப்பையும் எதிர்காலத்தில் பெறுவார் என்று கருதலாம்.. தனது உள்ளன்பால் மக்களுடன் இணைந்து செயலாற்றும் விஜய்க்கு மக்களின் அதாவது புதிய ஆண் பெண் இளம் தலைமுறைகளின் ஏகோபித்த ஆதரவும் இருக்கும் என்பது இனிவரும் நம்பிக்கையாக இருக்கிறது.
காலம் பதில் அளிக்கும்….பார்ப்போம்…
நம்பிக்கை!
@tvkvijayhq
@TeamTVKOnline
@VijayCenaOrton
@actorvijay
#விஜய் #தமிழகவெற்றிக்கழகம்
Actor Vijay ActorVijay தமிழக வெற்றி கழகம்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
24-8-2024.
கட்சி ஆரம்பிக்கிறேன், விரைவில் வருகிறேன், இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று ஒரு தலைமுறையவே ஏமாற்றிய தமிழ்நாட்டின் உச்சபட்ட நட்சத்திரத்திற்கு மத்தியில், கட்சி ஆரம்பிப்பதும் அதை நடத்துவதும் எவ்வளவு கடினம் என்பதை அறிந்து நீங்கள் கட்சியை ஆரம்பித்திருப்பது மிகவும் பாராட்டுத்தக்க விஷயம். ஓட்டுக்கு பணத்தை அள்ளி வீசும் தமிழக அரசியல் களத்தை நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன்.
No comments:
Post a Comment