நீங்கள் உண்மையிலேயே யார் என்று புரிந்துகொள்ளாத ஒருவரைப் பிடித்துக் கொண்டிருப்பதை விட, சில நேரங்களில் அவர்களை கைவிட்டு முன்னே செல்வது நல்லது. நீங்கள் அவர்களுடன் இல்லாததன் வலியை அவர்கள் உணரும் நேரம் கண்டிப்பாக வரும். உங்கள் முக்கியத்துவம் ஒருநாள் கண்டிப்பாக புரியும்...
உங்களுடன் தொடர்ந்து பயணம் செய்யாத முடியாத, மதிப்பில்லாத அந்த உறவை நினைத்து, நீங்களே உங்கள் இதயத்தை காயப்படுத்துவதை நிறுத்துங்கள்...
உங்கள் மீது அக்கறை கொள்ளும்படி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது...
உங்களுக்கு உண்மையாக இருக்கும்படி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது...
உங்களுக்கு பிடித்த நபராக இருக்க, நீங்கள் ஒருவரைக் கட்டாயப்படுத்த முடியாது, அவர்களாக இருக்க வேண்டும்...
உண்மை என்னவென்றால், சில சமயங்களில் நீங்கள் மிகவும் விரும்பும் நபர் உங்களுடன் இல்லாமல் போனாலே, நீங்கள் சிறந்தவராக இருப்பீர்கள்...
உங்கள் வாழ்க்கையில் வரும் விஷயங்கள் எல்லாமே உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்று நினைப்பதை நிறுத்துங்கள். சில விஷயங்கள் தோல்விகளை கொடுக்கும். சில பாடங்களை கொடுக்கும். சில வருத்தங்களை கொடுக்கும். சில போராட்டங்களை கொடுக்கும். அனைத்தும் கலந்ததே வாழ்க்கை...
அன்பை காட்ட நீங்கள் செய்யும் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் ஒன்றை இழந்து ஒன்றை பெற முயற்சிக்காதீர்கள்...
நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கும் அன்பை, திருப்பி செலுத்த தயாராக இல்லாத ஒருவரிடமிருந்து உங்களுக்குத் தேவையான உறவைப் பெற முடியாது...
நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், "தரமில்லாத நன்றியற்ற உறவில் இருப்பதை விட தனிமையில் இருப்பது நல்லது..."
அவர்கள் உங்களை, அவர்களுக்கான ஒரு விருப்பப் பொருளாக மட்டுமே பார்த்தால், அவர்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னுரிமை பெறத் தகுதியற்றவர்கள்...
புரிந்துகொள்ளுங்கள், உங்களை பின்தொடராத ஒருவரை, ஒருபோதும் நீங்கள் பின்தொடர வேண்டாம்...
உலகம் காணாத வீரம் கொண்ட மாவீரர் எல்லாம் வீணர்களின் துரோகத்தாலே வீழ்ந்தது தான் பாரதம் கண்ட சரித்திரம்..
மாமன்னன் பிருத்விராஜ் சௌகான் ராஜபுத்ர பெருவீரர்..
அவரை வீழ்த்தியது ஜெய்சந்தர் எனும் துரோகி முகமது கோரியின் ஆதிக்கத்துக்கு வழிவகுத்தான்..
ராணா பிரதாப் சிங் எனும் அசகாய பேராண்மைமிக்க பெருவீரனை அவரது சகோதரன் சக்தி சிங் தான் அக்பருக்கு காட்டிக் கொடுக்கும் தகவல்களை சொல்லி ஹல்திகடி போரில் மகாராணா பிரதாப் சிங்கின் தோல்விக்கு காரணமானான்..
நம் மண்ணில் வீரபாண்டிய கட்டபொம்மன் கூட காட்டிக் கொடுக்கப்பட்டே வீழ்த்தப்பட்டார்..
இதைப் போல ஆயிரம் ஆயிரம் சரித்திர சான்றுகள் பாரதமெங்கும் உள்ளது..
எதிரியை விட உடன் இருக்கும் நம்மவரே அதிக துரோகியாக உருவெடுப்பது கெட்ட சரித்திரம் ஆக தொடர்கிறது..
No comments:
Post a Comment