Monday, December 7, 2015
சென்னை அடையாறு புகைப்படம்
பாளை புனித சவேரியர் கல்லூரியில் நடந்த கரிசல் இலக்கிய கருத்தரங்கு
கடந்த 28.11.2015 அன்று திருநெல்வேலி, பாளையங்கோட்டை புனித சவேரியர் கல்லூரியில், இக்கல்லூரியும், உலகத் தமிழ் பண்பாட்டு மையம், கோவை இணைந்து கரிசல் இலக்கிய வளம் என்ற கருத்தரங்கு சிறப்பாக நடந்தேறியது.
கரிசல் படைப்பாளிகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகளும் வாசிக்கப்பட்டு அதைத் தொகுத்து உலக தமிழ் பண்பாட்டு மையம் நூலாக வெளியிட்டுள்ளது. இதை சிற்பி பாலசுப்ரமணியமும், ப.க. பொன்னுசாமியும் இணைந்து தொகுத்து அணிந்துரையோடு வெளியிட்டுள்ளனர்.
இது ஒரு நல்ல முயற்சி. கரிசல் இலக்கிய வளம் என்ற தொகுப்போடு பல பதிவுகளோடு பயனுள்ளதாக உள்ளது. ஆய்வுக்கு பயன்படும் நூலாகும்.
தமிழ் இலக்கிய உலகில் கரிசல் இலக்கியம், கரிசல் மண் என்பது தவிர்க்க முடியாதது. கிராமப்புற அப்பாவி சம்சாரிகளும் அவர்களுடைய வாழ்க்கை முறைகளும் கரிசல் வட்டார மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. இந்த படைப்புகளை படிப்பது மட்டுமல்ல மனதை ஈர்க்கக் கூடியதாகும். கவடு, சூது இல்லாத இந்த மக்களின் வாழ்க்கை முறைகளை அனைவரும் கவனிக்க வேண்டும்.
இது குறித்து எனது நிமிர வைக்கும் நெல்லையில் கரிசல் பூமி என்ற தலைப்பில் எனது பதிவு:
கோமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்‘ கதையை இயக்குநர் பாலச்சந்தர் இயக்க, கோவில்பட்டி அருகே ஏழுபட்டி என்ற கிராமத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம். அத்திரைப்படம் மூலமாகக் கரிசல் மண்ணின் வாழ்க்கையைத் தெளிவாகத் தமிழகம் பார்த்தது. அரசின் திட்டங்கள் கூட அங்கு எட்டிப் பாராத நிலையையும் திரைப்படம் தெளிவுபடுத்தியது.‘
ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் வடபகுதியில் உள்ள கரிசல் கந்தக பூமி போராளிகளையும், இலக்கியகர்த்தாக்களையும் உருவாக்கியுள்ளது. திரு. ஆர்.எஸ். ஜேக்கப் கந்தக பூமியைப் பற்றிச் சொல்லும்பொழுது ”கரிசல் பூமி, குடிதண்ணீருக்குக் கூப்பாடு. ஆனா அதுக்குன்னு ஒரு பெருமை இருக்கு. உப்புத் தண்ணிக்கு எங்க ஊரு உலகப் பிரசித்தம். நிறைய இறவைக் கிணறு இருக்கு. எல்லாம் உவர் தண்ணீர். குளத்துக்குள்ள ஊத்து தோண்டி ஊற ஊறத் தண்ணி எடுத்துக் குடிப்போம். கண்ணீர் மாதிரி சொட்டுச் சொட்டா தண்ணி சுரக்கும். அதைச் சிரட்டையில் வழிச்சி வழிச்சி மண் குடத்துல ஊத்துறது தனிக் கலை. கரிசல் மண்ணுக்குன்னு தனியா ஒரு மணமுண்டு. ஆண்டுக்கு மூணு மழை பெய்தா வானம் பார்த்த பூமி. அந்த மழையும் பெய்யாட்டா வனாந்தர பூமி. எந்த நதியும் எங்களை நனைத்ததுமில்லை. உவர் தண்ணிக்கு மிளகாய் நல்லா காய்க்கும். எள்ளுச் செடி தள்ளி வளரும். எங்க மொழியே தனி. ‘என்லே எப்படி இருக்கா?‘ இப்படித்தான் நலம் விசாரிப்போம். எங்க பேச்சுமொழி கொச்சையாத்தான் இருக்கும். ஆனா, இலக்கியம் கொஞ்சி விளையாடும்“ என்று குறிப்பிடுகிறார். இப்படி என்னுடைய நிமிர வைக்கும் நெல்லையில் கரிசல் பூமியும், கரிசல் இலக்கியங்களை குறித்து விரிவான பதிவுகளும் உள்ளன. வெளிவர இருக்கும் இரண்டு தொகுதிகள் அடங்கிய விரிவான பதிப்பிலும் அதிகமான தரவுகளோடு வெளியிடப்படும்.
கரிசல் இலக்கியத்தின் முன்னோடிகளான கி.ராஜநாராயணனும் அவருடைய சகா கு. அழகிரிசாமியும் இதற்கு பிதாமகன் மட்டுமல்லாமல் விதையிட்டு இந்த இலக்கியங்களை வளர்த்தவர்கள். முன்னயத்தி ஏரான கி.ரா.வினுடைய அரவணைப்பால் பல இளம் கரிசல் படைப்பாளிகள் தோன்றினர்.
இப்படியான வரலாறும் கீர்த்தியும் பெற்றதுதான் கரிசல் இலக்கியம்.
புனித சவேரியர் கல்லூரியில் நடைபெற்ற கரிசல் இலக்கிய கருத்தரங்கில் கதைசொல்லி பொறுப்பாசிரியர் கழனியூரான், தி.சு. நடராஜன், இரா. காமராசு, பேராசிரியர் க. பஞ்சாங்கம், சு. வேணுகோபால், ந. முருகேசபாண்டியன், ம. மணிமாறன், துரை. சீனிச்சாமி, ஆ. பூமிச்செல்வம், ஜெ. ஷாஜகான், எஸ். தோதாத்ரி, ந. ரத்னகுமார், பா. ஆனந்தகுமார் என்ற முக்கிய ஆளுமைகள் கரிசல் இலக்கியத்தை குறித்து ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தனர்.
இந்நிகழ்வில் வெளியிடப்பட்ட கரிசல் இலக்கிய நூலுக்கு சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களும். ப.க. பொன்னுசாமி அவர்களும் வழங்கிய முன்னுரையில் சில பகுதிகள்:
கரிசல் வெளியின் ஒளி
நிலம் முதற்பொருள் என்பது தமிழ் மூதாதையர் கொள்கை. எந்த நிலத்தில் பயிர்களும் உயிர்களும் வளர்கின்றனவோ அந்த நிலத்தின் சாரமும் பண்பும் அவற்றில் கரைந்திருப்பது இயற்கையின் தத்துவம்.
‘நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்‘
என்று சொன்ன பாரதி கரிசல் நிலம் கண்டெடுத்த அசுரவித்து.
தமிழகத்து நிலங்கள் பொதுவாக மலையும், காடும், வயலும், கடலுடுத்த கரையும் என்று பேசப்பட்டாலும் நுண்ணிய நோக்கில் அவை பல்கிப் பெருகியிருப்பதைக் காணலாம். கடலோரத்து வாழ்விலும் கடற்கரைக்குக் கடற்கரை மாறுதல்கள் உண்டு. அவ்வாறே தஞ்சை வயல் நாகரிகமும் கொங்கு வயல் நாகரிகமும் ஒன்றல்ல. மற்ற பெருநிலங்களிலும் மொழி, வாழ்வியல், பண்பாடு, வழிபாடு என ஆயிரம் வேறுபாடுகள் உண்டு.
பழைய நெல்லை, மதுரை மாவட்டத்தின் பகுதிகளில் சில, கரிசல் வாழ்வியலில் பெருமளவு ஒற்றுமையான கூறுகள் கொண்டவை. கோவில்பட்டி, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் முதலிய பகுதிகளில் கரிசல் நிலப் பண்பாடும், வாழ்வியலும் ஏறத்தாழ நிகரானவை. புன்செய்ப் பயிர்கள், மானாவாரி நிலங்கள், எளிய மக்கள் - பொய்த்துப் போகும் வேளாண்மையால் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் கருகும் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என வாழும் சமுதாயத்தை - வெயிலின் மக்களை அவர்களின் நம்பிக்கையோடும் நிராசைகளோடும், இளைத்துக் களைத்த ஏக்கங்களோடும், அவலங்களோடும், ஆனந்தங்களோடும், நாட்டுப்புறச் சந்தங்களோடும் நகரிய வாசனைகளோடும் உயிர்ப்பதிவு செய்திருக்கிறது கரிசல் இலக்கியம்.
தமிழ் இலக்கியத்தில் படைப்பின் வீரியம் ததும்பும் ஒளி அத்தியாயமாகக் கரிசல் இலக்கியப் படைப்புகள் நின்று நிலைக்கின்றன.
கரிசல் இலக்கியத்தின் எழுச்சி அலைக்கு இசைசெவல் கிராமத்தைச் சேர்ந்த இரட்டையர்களான கு. அழகிரிசாமியும், கி. ராஜநாராயணனும் தான் மூலவர்கள். ஒருவர் தொடங்கி வைத்ததை மற்றொருவர் அக வளமும் விசாலமும் கொண்டதாக வளர்த்தெடுத்தார். வறண்ட கரிசலிலும் வற்றாத கிணறான கி.ரா. வாய்க்கால் வழிய வழியப் பாயவிட்ட நீரால் கரிசல் இலக்கியம் பாத்தி பாத்தியாகப் பருத்தி வெடித்தது போல் இன்றும் வளமோங்கி நிற்கிறது.
கு. அழகிரிசாமி, கி.ரா., கோணங்கி, தமிழ்ச்செல்வன், பூமணி, சோ. தர்மன், பா. செயப்பிரகாசம், முத்தானந்தம், சுயம்புலிங்கம், மேலாண்மை பொன்னுசாமி, தனுஷ்கோடி ராமசாமி, வேல இராமமூர்த்தி, உதயசங்கர், இலட்சுமணப் பெருமாள், வீர வேலுசாமி ஆகியோர் கரிசல் படைப்பாளிகளில் முக்கியமானவர்கள். இவர்களில் பா. செயப்பிரகாசம் குறித்த கட்டுரை உரிய நேரத்தில் எங்களுக்குக் கிடைக்காமல் போனது பேரிழப்பு.

முல்லைப் பெரியாறு
முழு கொள்ளளவில் முல்லைப் பெரியாறு: 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அதன் அனுமதிக்கப்பட்ட முழுகொள்ளளவான 142 அடியை நெருங்குவதால் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட மக்களுக்கு 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேக்கடி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அதன் அனுமதிக்கப்பட்ட முழுகொள்ளளவான 142 அடியை நெருங்குவதால் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட மக்களுக்கு 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள தமிழக எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்கு நீர் தேக்க உச்சநீதிமன்ற அனுமதி உள்ளது. அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அனானியின் நீர்மட்டம் 141.7 அடியாக உள்ளது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இதே நிலையில் இருந்தால் நாளை காலைக்குள் அணை முழுக்கொள்ளளவான 142 அடியை எட்டிவிடும் என்று கருதப்படுகிறது.
இதனால் அணையை ஒட்டிய தமிழகத்தின் தேனி மாவட்ட மக்களுக்கும், வைகை கரையோர மக்களுக்கும் மற்றும் கேரளா மாநில இடுக்கி மாவட்ட மக்களுக்கு 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு1,400 அடியிலிருந்து 1,816 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை 2,200 அடியாக அதிகரிக்குமாறு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை இடுக்கி மாவட்ட ஆட்சியர் வி.ரதீசன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், முல்லைப் பெரியாறு அணையில் இடுக்கி மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆய்வு நடத்த உள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும்பட்சத்தில் 13 மதகுகளின் வழியாகவும் உபரி நீர் அதிக அளவு வெளியேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு கேரளா வழியாகவும் உபரி நீர் திறக்கப்படும்.
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
07/12/2015

தமிழீழ அரசாங்க நியூயார்க் மாநாடு
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் நண்பர் ருத்ரகுமார் அவர்கள் நியூயார்க்கில் கடந்த டிசம்பர் 4-6 வரை நடைபெற்ற மூன்று நாட்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அழைத்திருந்தார். ஆனால் இயற்கை பேரிடரால் சென்னையில் இருக்க வேண்டிய காரணத்தினால் கலந்துகொள்ள இயலவில்லை. கடந்த நவம்பர் 6ம் தேதி தென் ஆப்பிரிக்கா டர்பன் நகரில் நடைபெற்ற மாநாட்டிலும் வைகோ அவர்கள் தாயார் காலமானதால் கலந்துகொள்ள இயலவில்லை.
நியூயார்க்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இன்றைக்குள்ள நிலவரம் அங்கு ஏற்படுத்த வேண்டிய தீர்வுகள் மட்டுமல்லாமல் சென்னையும், தமிழகமும் கடந்த ஒரு வாரமாக இயற்கை பேரிடரால் வதைப்பட்டது குறித்தும் உரிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்களுக்கு மேல் நல்ல நகர்வுகள் ஏற்படவேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
07/12/2015
Sunday, December 6, 2015
TN flood unites the people
கைகோர்த்து நிற்கும் மக்கள் சக்தி - TN flood unites the people
--------------------------------------------------------------------
தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும், மாநிலத்தின் உயிர் நாடியான சென்னையிலும், கடலூரிலும் மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கி சிதைந்து வருகின்ற நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை சரிவர எடுக்காமல் கையறு நிலையில் உள்ளது ஆளும் அதிமுக அரசு. இந்த கொடுமையான சூழ்நிலையில் யாரையும் குற்றம் சாட்டுவதோ, குறை சொல்வதோ, விமர்சிப்பதோ கூடாது என்றாலும் மனதில் உரைக்கும் வகையிலான உண்மைகளை எடுத்துக் கூற வேண்டிய கடமை நமக்குள்ளது. இது ஒரு ஆரோக்கியமான விமர்சனமும் கூட.
பிரெஞ்சு சர்வாதிகார அரசியான மேரி ஆண்டைனெட்தான் பிரெஞ்சு புரட்சிக்கான காரண கர்த்தாவாக விளங்கினார். மக்கள் பசியாலும், பஞ்சத்தாலும், பட்டினியாலும் வதைப்பட்டு ஒரு துண்டு ரொட்டிக்காக கையேந்தி நின்ற போது, பணமிருந்தால் கேக் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி அவர்களை துச்சமாக நடத்தினார். விளைவு பிரெஞ்சு மக்கள் கொதித்தெழுந்து அரசிக்கு எதிராக பெரும் களப் புரட்சியை மேற்கொண்டனர். தற்போது தமிழக மக்களும் அதே சொல்லொண்ணா துயர் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த மழை மக்களின் ஜாதி, மத, அதிகார, வர்க்க வேற்றுமைகளைக் களைந்து, வேற்றுமையில் ஒற்றுமை என்னும் நிலையை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்துக்களின் வீட்டிலிருந்து உணவும், முஸ்லிம்களின் வீட்டிலிருந்து உடைகளும், கிறித்துவர்கள் வீட்டிலிருந்து அத்தியாவசிய பொருட்களும் என்று மக்களின் மனிதாபிமான ஊற்று, மழையால் ஏற்பட்ட கொடுமைகளையும் தாண்டி, அணை திறந்த வெள்ளமாய் ஓடுகின்றது.
மக்களின் நடுவே வெளிப்படும் இந்த மனிதாபிமானமும், அன்பும், தேவைகள் பற்றிய தெளிவும் ஆளும் அரசுக்கும் இருந்தால் மிக நல்லது. கடந்த காலங்களில் சென்னையில் புயலும், மழையும், வெள்ளமும் ஏற்பட்ட போதேல்லாம் முதல்மைச்சர்களாக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, பெருந்தலைவர் காமராஜர், தலைவர் கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகியோரெல்லாம் மழைக்காலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடந்தே சென்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் சொன்னதுண்டு.
இன்றைய முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சரிவர சென்று கூட பார்வையிடவில்லை. வேனிலும், ஹெலிகாப்டரிலும் உலா மட்டும் வந்து பார்வையிட்டதாக செய்திகள் மட்டுமே வந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் அதிமுக பிரமுகர்கள் நிவாரணப் பொருட்கள் கொடுப்பதை விட ஜெயலலிதாவின் படத்தை ஒட்டி கொடுப்பதிலேயே கவனமாகவும், அக்கறையாகவும் இருந்தார்களே ஒழிய மனித நேயத்துடன் நடந்து கொள்ளவில்லை. இந்த நிலைமையிலும் அரசு பரிபாலனங்களை நம்பாமல் மக்கள் சக்தி, ஜனதிரளாக உருவாகி இந்த பேரிடரில் தங்களைத் தாங்களே காத்துக் கொண்டது ஒரு அதிசயமாகும். எனவே, நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்ட கருத்துகளில் நியாயங்களும்,உண்மைகளும் உள்ளதை மறுக்க முடியாது நிலைதான்.
This AIADMK state government headed by Selvi.Jayalalitha, is impotent to take adequate and efficacious measures to solve the serious flood issues in Chennai, Cuddalore and all over Tamil Nadu. Any one cannot blame at this crucial moment, and also criticize each other in this critical situation. we have to join together to face the natural calamity. but the time belongs to our concern to understand the depth of the problem. Marie Antoinette is the main route cause for French revolution.
The French people were fed up with Marie for cake and single piece of bread with empty stomach and teared eyes. She replied for them with Beat around the bush, which leads to French revolution. Same situation in our Tamil Nadu, which could make the people as protesters against the state government soon, for example the state minsters inspected flood affected areas, people thrown away their anger on them, and they ran away. At the same time, our people forget all the discord, love only Costs an arm and a leg in this flood.
The state Government must need to learn about some moral responsibilities in this floody situation. We are in the needle point to speak about the truth. All these troubles and this situation leads the people to join the hands and unite the people, to made them to cross the border of religion, cast and other inequality.people's force sort out all miseries and troubles we face in last one week. people's consolidation is only sovereignty in the democracy.
அன்றைய சென்னை நீர்நிலைகளின் இன்றைய நிலை:
https://web.facebook.com/photo.php?fbid=1682052602084422&set=a.1440211136268571.1073741830.100008390956876&type=3&theater
#ksr_posts #ksradhakrishnan #floodsinchennai
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
Water management in olden days
Was looted by self centred anti nationals
#ksr_post #ksradhakrishnan #watermanagement
Old British map
Look at this old British map of what is today, T. Nagar, West Mambalam, Lake Area, Saidapet, Nungambakkam and more. You build on a lake and then cry when it floods.. Makes sense
Subscribe to:
Posts (Atom)
Oct 21, 2025 பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும்,
பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும், அத்வானி கட்சிக்குள் ஒரு சக்தியாகக் காணப்பட்டார், பின்னர் துணைப் பிரதம...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...