Wednesday, April 1, 2015

விவசாய கடன்கள் தள்ளுபடி


ரிசர்வ் பேங்க் கவர்னர் திரு.ரகுராம்ராஜன், விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டங்கள் விவசாயிகளுக்கு சரியாக சேருவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

 


இதற்கு காரணம் என்ன என்றால் சிவப்பு நாடா நந்திகள்.
கடன் தள்ளுபடியால் நடுத்தர விவசாயிகள் 3.6 கோடி பேரும், இதர விவசாயிகள் 60.52 லட்சம், போன்ற விவசாயிகளுக்கு 5.6 கோடி கடன் ரத்து செய்யப்பட்டு நிவாரணம் பெற்றுள்ளன என செய்திகள் வந்துள்ளன. 30% விவசாயிகள் மட்டும் தான் இந்த நிவாரணத்தை மிகவும் சிரமப்பட்டு பெறவேண்டி இருந்தது. ஆனால் டாட்டா, பிர்லா, விஜய் மல்லையா போன்றோர் கடன் வாங்கினால் எந்த நெருக்கடியும் வங்கி நிர்வாகம் தராது. ஏழை விவசாயிகள் வாங்கினால் கழுத்தை நெருக்குவார்கள். கல்வி கடன் வாங்கினால் நடுத்தர குடும்பங்கள் கட்டுவதற்குள் வங்கி அதிகாரிகளின் நெருக்கடியால் பலர் தற்கொலை செய்து கொள்ளகின்றனர். இதுவும் வல்லான் வகுத்தது தான் வழி என்ற நிலை சோசலிசம் என்பது அரசியல் அமைப்பு சட்டத்தில் பயனற்ற வகையில் அர்த்தமில்லாமல் உள்ளது.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...