முழுதும் வாசிக்க படத்தில் க்ளிக் செய்யவும் |
_________________________________________________
மத்திய அரசு இந்தியாவில் 101 உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து வழிகளை அமைக்க முடிவெடுத்துள்ளது. இதில் எட்டுதிட்டங்கள் கேரளாவில் அமைக்கபட உள்ளன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்கிங்காம் கால்வாய்த்திட்டம், கடலூர் மாவட்டம் மரக்காணம் வழியாக சென்னைக்கு வந்து ஆந்திரம் மற்றும் ஒரிசா எல்லை வரைக்கும் எழுபது என்பது ஆண்டுகளுக்கு முன் செயல்பாட்டில் இருந்த திட்டம். மறுபடியும் பக்கிங்காம் கால்வாய்ப்போக்குவரத்து நடைமுறைக்கு வருமா என்பது நம் அனைவரின் எதிர்பார்ப்பு.
கேரளாவில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பரதப்புழா, சாலியாறு கல்லாடா, பம்பா, மணிமாலா, வாழாப்பட்டிணம் போன்ற பகுதியில் இத்திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதேபோல அஸ்ஸாம், அருணாச்சலபிரதேசம், மேற்கு வங்கம், பிகார், உத்திரபிரதேசம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் சில பகுதிகளிலும் இந்த நீர்வழிப்போக்குவரத்து திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஜீலம் நதி பாயும் காஷ்மீரும், கங்கை, பிரம்மபுத்திரா, மகாநதி, கிருஷ்ணா, கோதாவரி என்ற நதிதீரங்களில் அமையவுள்ள நீர்வழிப் போக்குவரத்து திட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழகம் எதிர்பார்ப்போடு இருக்கும் பக்கிங்காம் கால்வாய் நீர்வழிப்போக்குவரத்து திட்டம் இந்த 101 உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து திட்டத்தில் முழுமையாகச் சேர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.
உலக அளவில் ஐரோப்பாவில் 40சதவிகிதமும், சீனாவில் 45 சதவிகிதமும் நீர்வழிப்போக்குவரத்து செயல்பாட்டில் உள்ளது. ஆனால் இந்தியாவில் 15.3 சதவிகிதம் மட்டுமே நீர்வழிப்போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றோம்.
மத்திய தமிழகத்தில் காவேரி, ஒகேனக்கல், பழவேற்காடு ஏரி, போன்ற பகுதிகளில் நீர்வழிப்போக்குவரத்து திட்டங்களை வகுக்கலாம்.
நீர்வழிப்போக்குவரத்து திட்டம் குறித்தும், பக்கிங்காம் கால்வாய் திட்டம் பற்றியும் ஏற்கனவே என்னுடைய கடந்த மார்ச் மாதம் 27ம் நாள் “கடல் ஆரம்” ( #Waterways ) பதிவில் முழுமையாக எழுதி இருந்தேன்.
மேலும், பக்கிங்காம் கால்வாய் குறித்து தினமணியில் நான் எழுதி
18-12-2008 அன்று வெளியான தலையங்கப் பக்கக் கட்டுரையையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
13.04.2015.
#InlandNavigationWaterWaysofIndia
#Buckingham_Canal.
No comments:
Post a Comment