தஞ்சை காவிரி டெல்டாவை நாசப்படுத்தும் வகையில் மீத்தேன் திட்டம் அப்பகுதி மக்களை ரணப்படுத்தியது. அப்பகுதி மக்கள் வீறுகொண்டு கொதித்தெழுந்தனர். பலபோராட்டங்கள் நடைபெற்றன.
இப்படியான நிலையில் மீத்தேன் திட்டத்தை கைவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அப்படி, மீத்தேன் திட்டம் கைவிடப்பட்டால் தஞ்சை விவசாயிகள் காப்பாற்றப்படுவார்கள் என்பது ஒரு நிம்மதியான செய்தியாக இருக்கும்.
இத்திட்டத்தை எதிர்த்து போராடியவர்களை, குரல்கொடுத்தவர்களை தமிழச்சமூகம் கையெடுத்து வணங்கவேண்டும்.
தமிழ்நாட்டினுடைய கடுமையான எதிர்ப்பும், போர்குணத்தையும் பார்த்து மத்திய அரசு சிந்தித்துள்ளது. உள்ளபடி எதிர்ப்பைக்கண்டு மீத்தேன் திட்டத்தின் முதலாளிகள் ஒப்பந்தகாலம் முடிந்தது என்று துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடிவிட்டார்கள்.
இப்படி நம்முடைய போர்குணத்தை தமிழகத்தின் உரிமைப் பிரச்சனைகளில் காட்டினால் தான் டெல்லியின் செவிப்பறைகளுக்குக் கேட்கும்.
20-03-2015
No comments:
Post a Comment