இந்தவார ஜூனியர் விகடனில் ஆலங்குளம் சிமெண்ட் ஆலை பிரச்சனை குறித்து நான் தொடுத்த வழக்கு சம்பந்தமான பேட்டி, செய்திக் கட்டுரையாக வந்துள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த பொழுது திட்டமிடப்பட்டு, தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆட்சிகாலத்தில் 1970களில் தொடங்கப்பட்டது ஆலங்குளம் சிமெண்ட் ஆலை.
1986காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் இதை விற்க முயற்சி செய்தபோது, சென்னை உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பிரச்சனை குறித்து நான் தொடர்ந்த வழக்கால் விற்கமுடியவில்லை.
தற்போதும் இந்த ஆலையினை மூடிவிட்டு தனியாருக்கு விற்க முயற்சிகள் நடப்பதைக் குறித்து அனைத்துக் கட்சிகளும் ஆலங்குளத்தில் போராட்டம் நடந்த்தியது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் என்னுடைய வழக்கு கடந்த 31.03.2015 அன்று விசாரணைக்கு வந்தபோது அரசு வழக்கறிஞர் புகழேந்தி “ஆலங்குளம் ஆலை நஷ்டத்தில் இயங்குவதால் மூடத்திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
ஆனால், சட்டமன்றத்தில் அமைச்சர் தங்கமணி இதற்குமுன்
“ஆலை நவீனப்படுத்தப்படும், மூடப்படுவதாக எண்ணமில்லை” என்று தெரிவித்திருந்தார். சில நாட்களுக்குப்பின் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் இவ்வாறு மாற்றிக் கூறுவது குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்யவேண்டும்.
2228ஏக்கரில் அமைந்துள்ள ஆலங்குளம் சிமெண்ட் ஆலைக்கு இதுவரை 150ஏக்கர் பரப்பில்தான் சுண்ணாம்புக்கல் வெட்டப்பட்டுள்ளது. மீதம் உள்ள பரப்புகளில் கிடைக்கும் இன்னும் 100 ஆண்டுகளுக்குத் தேவையான கனிம வளங்களைக் கொண்டு ஆலையினை வெற்றிகரமாக நடத்தலாம்.
ஜூனியர் விகடன் இதழில் தொழில் அமைச்சர் தங்கமணி, கடந்த மார்ச் மாதம் வரை இந்த ஆலை இலாபம் தான் ஈட்டித்தந்துள்ளது என்றும், மூடத்திட்டமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலையினை மூடுவதற்கோ, தனியாருக்கு விற்பதற்கோ திட்டமில்லை என்று மறுத்துள்ளார்.
நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பேச்சுக்கும் அமைச்சர்கள் பேச்சுக்கும் இடையே முரணாக இருக்கின்றது. ஆனால் நீதிமன்றம் நன்கு பரிசீலனை செய்து இதற்கு நியாயம் வழங்கும்.
கண்ணாம்பூச்சி விளையாட்டாக இருந்த இந்தப் பிரச்சனை நீதிமன்றத்தின் பரிசீலனையால் வெளிப்படையாக மக்கள் அறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கேற்றவாறே இந்தவார ஜீனியர் விகடனில் (08-04-2015) பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. உண்மையின் உரைகல்லாக இச்செய்தி அமைந்துவிட்டது.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-04-2015.
*******
ஆபத்தில் ஆலங்குளம் சிமென்ட் ஆலை!
ஜெ. அறிவித்த 169 கோடி என்னாச்சு?
தமிழக அரசுக்குச் சொந்தமான ஆலங்குளம் சிமென்ட் ஆலையைக் காப்பாற்ற வேண்டும் என்று கடந்த ஆறு மாதங்களாகத் தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சிமென்ட் ஆலை அமைந்துள்ள சாத்தூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவும் வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், 'எந்த நிலையிலும் சிமென்ட் ஆலையை தனியாருக்கு தாரை வார்க்க மாட்டோம்’ என்று நம்மிடம்
(21.1.15 தேதியிட்ட ஜூ.வியில்) சொன்னார். ஆனால் இப்போது, ஆலையை தனியாருக்கு விற்பதற்கான முஸ்தீபுகள் நடப்பதாகக் கொந்தளிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஆலங்குளம் சிமென்ட் ஆலைக்காக வழக்கு தொடர்ந்துள்ள தி.மு.க செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர்
கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது,
''விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் சிமென்ட் ஆலை அமைக்க காமராஜர் முயற்சி எடுத்தார். அதன் தொடர்ச்சியாக, 1969ம் ஆண்டு ஆலங்குளம்
see more ... http://www.vikatan.com/article.php?module=magazine&aid=105217
No comments:
Post a Comment