Thursday, April 16, 2015

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - Albert Einstein.





                          ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஜெர்மனியின்,  உர்ட்டெம்பர்க்  நகரிலுள்ள  உல்ம் என்னுமிடத்தில், மார்ச் 14, 1879ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தையார், ஹேர்மன் ஐன்ஸ்டீன், மின்வேதியியல் தொழில் நிலையமொன்றை நடத்திவந்தார். தாயார் போலின் கோச்.

 தாயாரின் வற்புறுத்தல் காரணமாக இளமையில் வயலினும் கற்றுவந்தார். இவர் ஐந்து வயதாக இருந்தபோது, இவரது தந்தையார் இவருக்கு ஒரு சட்டைப்பையில் வைக்கக்கூடிய திசையறி கருவியொன்றைக் காட்டினார். அந்த வயதிலேயே அவர் ஒன்றுமற்ற வெளியில் ஏதோ ஒன்று காந்த ஊசியில் தாக்கம் ஏற்படுத்துவதைப் புரிந்துகொண்டார். கூடவே பொழுதுபோக்காக இயந்திரக் கருவிகளின் மாதிரிகளை வடிவமைத்துவந்தார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிறுபிராயத்தில் மிக மெதுவாகவே கற்கமுடிந்தது எனச் சிலர் கூறுகிறார்கள். இவர் தனது 12 ஆவது அகவையிலேயே கணிதம் படிக்க ஆரம்பித்தார். மியூனிக்கிலே பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு,  1896ல் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரிலுள்ள சுவிஸ் கூட்டமைப்புப் பல்தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். இந்தச் சமயத்தில் அவர் தனது ஜெர்மனி நாட்டு குடியுரிமையை விட்டு, நாடற்றவரானார்.

1898ல் மிலேவா மாரிக் என்னும் உடன்கற்றுவந்த செர்பிய பெண்ணொருவரைக் காதலித்தார். 1900ல், சுவிஸ் பல்கலைக் கழகத்தில் கற்பித்தல் டிப்ளோமாவை பெற்றுக்கொண்டதும். 1901ல் சுவிட்சர்லாந்தின் குடியுரிமையைப் பெற்றார். மிலேவாவை திருமணம் செய்துகொள்ளாமலே, அவர்மூலம், லிசேர்ள் என்ற மகள் இவருக்குப் பிறந்தார்.

அக்காலத்தில் அணுக்கள் என்பது ஒரு பயன்பாட்டு கோட்பாடாக அங்கீகரிக்கபட்டிருந்தாலும் கூட, அணுக்களின் இருக்கை தொடர்பாக இயற்பியலாளர்களுக்கும் வேதியியலாளர்களுக்கும் இடையில் சூடான விவாதங்கள் நடைபெற்று வந்தன. அணுக்கொள்கை தொடர்பான ஐன்ஸ்டீனின் புள்ளிவிபரம் ரீதியான விளக்கம், சாதாரண மைக்ரோஸ்கோப் வழியே பார்ப்பதன்மூலம் அணுக்களை எண்ணும் வழியினையும் கொள்கையினையும் வகுத்தார். ஆராய்ச்சியாளர்களுக்கு ஐன்ஸ்டீனின் இந்த வழிமுறை அருட்கொடையாக அமைந்தது.

வில்கெல்ம் ஒஸ்ட்வால்ட் அணுவுக்கெதிரான கொள்கையை கொண்டிருந்தார், ஐன்ஸ்டீனின் பிரெளனியனின் இயக்கம் தொடர்பான முழுமையான ஆராய்ச்சிகள் காரணமாக, அணு தொடர்பாக தானும் நம்பிக்கை பெற்றேன் என்று, பிற்காலத்தில் அறிவித்தார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார்..  இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஐன்ஸ்டீனின் கொள்கைகளையும் தத்துவங்களையும் புரிந்துகொள்ள, அவற்றைப் பலமுறை படித்தால் தான் புரிதல் பெறமுடியும். அதைப்புரிந்து கொண்டால் ஒருகற்றறிந்த மேதையாகிவிடலாம்.

ஐன்ஸ்டீன் ஒரு விஞ்ஞானி மட்டுமில்லாமல், சமூகத்திலும் உலக அரசியலில் உள்ள நிலைகளையும் தன் எழுத்தில் அருமையாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். உலகத் தலைவர்கள் அத்தனைபேருடைய அன்பையும் பெற்றவர். பண்டிதர் நேருவின் நண்பர். இப்படியாக ஐன்ஸ்டீனைப் பற்றி மிகச்சுருக்கமாகச் சொல்லிவிட முடியாது. ஐன்ஸ்டீன் என்ற ஆளுமை பன்முகத் தன்மை கொண்டது.

ஐன்ஸ்டைன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999ல், புதிய புத்தாயிரம் ஆண்டைக் குறித்து வெளியிட்ட  ’டைம் சிறப்பு இதழ்’, "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்று  ஐன்ஸ்டீனை பாராட்டியது.

உலகத்திற்கு ஐன்ஸ்டீன் வழங்கிய படைப்புகள் :
சிந்தனைகளும் கருத்துக்களும்
உலகம் எனது பார்வையில் (மெயின் வெல்ட்பில்டின் மொழியாக்கம்)
Relativity: The Special and General Theory
"On the Electrodynamics of Moving Bodies" Annalen der Physik.
"Does the Inertia of a Body Depend Upon Its Energy Content?". Annalen der Physik.
"புருசிய அறிவியல் கழகத்தில் ஆற்றிய முகப்புரை".
"The Foundation of the General Theory of Relativity ". Annalen der Physik,
"ஏன் பொதுவுடைமை,"
"ஈர்ப்புவிசையின் பொது கோட்பாட்டு"..

அறிவியல் மட்டுமில்லாமல், மானிடம் எப்படி இருக்கவேண்டுமென்று நமக்குச் சொன்ன ஐன்ஸ்டீன் புகழ் என்றும் நிலைக்கும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
 16-04-2015.

#Albert_Einstein.
#KSR_Posts

____________________________________________________

MARCELO GLEISER 
*************************

One hundred years ago, a 36-year-old Albert Einstein presented the complete formulation of the General Theory of Relativity to the Prussian Academy of Sciences. Across the world, events and conferences will be celebrating what is considered, without hyperbole, the most beautiful of physical theories, marrying mathematics with physical concepts in deeply meaningful and elegant ways. Some consider it the highest intellectual achievement in history.

Whatever your take, it is undeniable that Einstein's theory is a magnificent example of the power of the human imagination as it attempts to decipher nature's most hidden secrets: Welcome to the universe of curved spaces, black holes, the Big Bang, wormholes and even multiple universes.
First, why "general"? It distinguishes it from Einstein's "special" theory of relativity, proposed in 1905, which focused on motions with constant speeds. The special theory revolutionized our views of space, time and matter. Einstein showed that our perception of reality is myopic, distorted due to our sluggishness; could we perceive motions with speeds close to the speed of light (186,000 miles per second), we would see objects shrinking in the direction of their motion, clocks slowing down, and masses increasing with speed. These weird effects are all around us, but imperceptible for the speeds we are used to. (Consider this: If you blink your eye, light goes about 7 1/2 times around the Earth.) They are routinely observed in high-energy physics, where subatomic particles collide with speeds close to the speed of light. Even a GPS corrects for relativistic effects: The satellites that provide us the service move fast enough in their orbits to justify the small correction for improved accuracy.
 (They also use general relativistic effects due to Earth's curving of space around it.)

Einstein knew that the special theory was not the final word. After all, objects don't move at constant speeds in straight lines, but accelerate and turn corners. His general theory was designed to include all motions. To his surprise, and in a moment of spectacular intuition, Einstein realized that any theory that includes accelerated motion must also be a theory of gravity. Why? Because accelerated motion can mimic gravity and vice-versa. We know this from riding fast elevators. As you start going up you feel heavier. But how could that be? You didn't gain weight by stepping into the elevator! The accelerated motion upwards acts just as gravity, as if Earth had suddenly become more massive. Conversely, as the elevator goes down fast you feel lighter. If it simply fell down, you would float in mid-air, without any feeling of weight.

This weightlessness, by the way, is what astronauts feel when they are in orbit. It's not absence of gravity that makes them float; they are effectively falling down as they circle the Earth. The circular orbit is a product of Earth's gravity pulling them downwards and the tangential motion with constant speed that keeps them moving around.

Einstein struggled to get his theory right; the math was really hard. At the time, the Theory of Gravity was due to Isaac Newton, who figured that gravity could be described as a force that fell with the square of the distance. Newton assumed gravity was instantaneous and that it acted across space like a ghost. Although mysterious, the theory worked really well, for must purposes. Einstein proposed something completely different. Instead of an action at a distance, gravity was due to the curvature of space around an object: The more massive the object the more curved the space around it. It's like when you sit on a mattress: Close to you, the mattress gets deformed and it will get more deformed the heavier you are. If you now picture space as the mattress (you need to add an extra dimension, as the surface of the mattress is two-dimensional and we live in three dimensions) you see what Einstein imagined.

Space became elastic, malleable and responding to the distribution of matter in it. Conversely, an object travelling in a curved space would have its trajectory deviate from a straight line. As the physicist John Wheeler quipped, "Mass tells space how to bend and space tells matter how to move."
Being a physicist, Einstein knew that his wild idea would only be taken seriously if he could provide real-world examples where the new effects could be verified. Testability, the core of the physical sciences! He proposed three tests of his new theory. One was a correction to the orbit of Mercury, that precessed mysteriously around the sun like a wobbling top. Newtonian theory couldn't get the numbers right; but Einstein, using that Mercury felt the curvature of space around the sun, got it right. Another effect was the bending of starlight as it passed near the sun. In 1919, astronomers set off to the western coast of Africa and to the city of Sobral in Brazil to measure the deviation of the light from stars during a solar eclipse. (This way they could compare the two situations, with the sun nearby, and far from, the path of the starlight). The results were convincing enough to validate Einstein's theory. Newton's theory was an approximation valid for weak gravity. In the new theory of gravity, the shape of space and the flow of time respond to the distribution of mass in the universe.

Within weeks of the announcement of the eclipse measurements, Einstein became a superstar. On Nov. 7, 1919, Londoners woke up to dramatic headlines from the Times: "Revolution in Science. New Theory of the Universe. Newtonian Ideas Overthrown." Likewise, The New York Times reported three days later: "Lights All Askew in the Heavens; Men of Science More or Less Agog over Results of Eclipse Observations. Einstein Theory Triumphs. Stars Not Where They Seemed or Were Calculated to Be, but Nobody Need Worry." The "worry" here presumably refers to the fear that the stars would fall on our heads. Indeed, there is no need to worry about that. Timemagazine would elect Einstein "Person of the Century."

Perhaps the greatest lesson from Einstein and his theories of relativity is that reality is not what it seems. What we perceive as real is a distortion, a cognitive fabrication due to how our brains take in the world around and within us. Science expands our vision of reality, revealing what often appears to be strange — and unforeseen connections and possibilities. As we continue our struggle to understand nature and its mysteries, it is good to remember Einstein's immortal words: "What I see in Nature is a magnificent structure that we can comprehend only very imperfectly, and that must fill a thinking person with a feeling of humility."

*

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...