இன்று (07-03-2015 ) தம்பி கார்த்திக் புகழேந்தியுடைய சிறுகதைகள் தொகுப்பான வற்றாநதி நூலினை,
சென்னை - திருவான்மியூர்; பனுவல் அரங்கத்தில்,
நான் வெளியிட புதியதலைமுறை ஊடகவியளாலர் திரு. வேங்கட பிரகாஷ் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
நாட்டுப்புற ஆய்வாளரும் படைப்பாளருமான கழனியூரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் ஊடகவியலாளர் நாச்சிமகள்.சுகந்தி, தூத்துக்குடி கனவுப் பிரியன், இராதா இராமச்சந்திரன், ஷான் கருப்பசாமி, மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் பேராசியர்.பத்மாவதி, திரு.அப்பன்னசாமி, பனுவல் செந்தில்நாதன் , நெய்வேலி.பாலு ஆகியோர் கலந்துகொண்டனர்.
வற்றாநதி சிறுகதைத்தொகுப்பு நெல்லை, தாமிரபரணி, கோவில்பட்டி, கல்லிடைக்குறிச்சி, திருவேங்கடநாதபுரம், தூத்துக்குடி மண்ணின் தரவுகளடங்கிய வட்டாரவழக்குச் சொற்களோடு அற்புதமாக கார்த்திக் புகழேந்தி எழுதியுள்ளார் அவருக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்.
No comments:
Post a Comment