Tuesday, April 21, 2015

கதாசங்கிரகம் -1894. The Ancient Tamil literature -Katha sangraham

அன்புக்குரிய கவிஞர்.கலாபிரியா அவர்கள் தன்னுடைய முகநூலில் கதா சங்கிரகம் பற்றிய தரவுகளை இன்றைக்குச் சொல்லியுள்ளார்.

அட்டாவதானி வீராச்சாமி செட்டியாரின் காலமா? அதற்கு முற்பட்ட காலமா என்று கவனிக்கப் படவேண்டும்.  அக்காலத்தில் அச்சகம் என்பதை, அச்சு இயந்திரசாலை என்றும், வெளியிடப்பட்டதை பதிப்பிக்கப்பட்டது என்றும், விலையை கிரயம் என்றும் நூலின் முகப்புப் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பார்கள். 
கதாசங்கிரகம், அதிவிநோத கதா சங்கிரகம் நூல்களை திருவாடுதுறை ஆதீன நூலகத்தில் அங்கு சென்ற போது வாங்கிவந்து படித்துவிட்டு திருப்பி அனுப்பியதும் உண்டு. இந்த நூல் 1894ல் வெளியிடப்பட்டது.



-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-04-2015.
_________________________

Tk Kalapria

சங்கிரகம் என்று ஒரு வகை தொகை நூல் .’டைஜெஸ்ட்’ போல என்று சொல்லலாம். உவமான சங்கிரகம்,சதரத்ன சங்கிரகம் எனப் பல சங்கிரகநூல்கள் உள்ளன தமிழில் ,இது பற்றி புதிய தலைமுறை இதழில் ஒரு கட்டுரையில் எழுதி இருக்கிறேன்,என்னிடம் ஒன்று இருக்கிறது அதைஇன்று மீண்டும் கண்டு பிடித்தேன். பிரதாபமுதலியார் சரித்திரத்தின் பகுதி,கம்பர் பற்றிய வழங்கு கதைகள் என பல கதைகளின் தொகுப்பு,

No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...