Wednesday, April 1, 2015

காவேரி மறுகரையில் வாழும் தமிழர்களை விரட்ட கர்நாடக திட்டம்:






தர்மபுரி மாவட்டம், ஒகேனகல் அருகே காவிரி ஆற்றின் மறுகரையில் கர்நாடக மாநில எல்லையில் உள்ள மாறுகொட்டாய், தேங்காகோம்பு, பூங்கோம்பு, ஆத்தூர், கோட்டையூர், ஆலம்படி, அப்புகாம்பட்டி, ஜம்புருட்டிப்பட்டி போன்ற பல கிராமங்களில் வசிக்கும் ஆயிரம் கணக்கானோர் இப்பகுதியில் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் பிடித்தல், பரிசல் இயக்குதல் போன்ற தொழில் செய்து வருகின்றனர்.
இவர்களை கர்நாடக வனத்துறை, இவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வெளியேற சொல்கிறது. அங்கே சரணாலையம் அமைக்க போகின்றோம் எனவே நீங்கள் இங்கு இருக்க கூடாது என்று விரட்டப்படுகின்றனர். மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட போது இந்த இடங்கள் கர்நாடக மாநிலத்துடன் சேர்க்கப்பட்டது.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...