Friday, November 27, 2015

நமது பாரம்பரிய நெல் வகைகள் - Paddy.


மாப்பிள்ளை சம்பா
தூய மல்லி சம்பா
கண்டசா
சிகப்பு
கவுனி
சித்திரக்காலி
வாலான்
சிறைமீட்டான்
மணல்வாரி
செஞ்சம்பா
கருஞ்சூரை
சீரகச்சம்பா
முத்துவிளங்கி
மலைமுண்டன்
பொற்பாளை
நெடுமூக்கன்
அரிக்கிராவி
மூங்கில் சம்பா
கத்தூரிவாணன்
காடைக் கழுத்தன்
இரங்கல் மீட்டான்
கல்லுண்டை
பூம்பாளை
பாற்கடுக்கன்
வெள்ளை
புத்தன்
கருங்குறுவை
புனுகுச் சம்பா
கஸ்தூரி சம்பா
குணாசம்பா
குண்டுமணி சம்பா
கொத்தமல்லி சம்பா
தூய்யமல்லி சம்பா
கீர சம்பா
கல்லன் சம்பா
கட்டு குறுவா
இடார்ப்ப குறுவா
இமி குறுவா
கரி குறுவா
குல குறுவா
பனம் குறுவா
அறுவாள் குறுவா
சொர்ணவாரி
காடகழுத்தான்
விலங்கன்
மானாவாரி
மருதவேளி
கரிமுலாக்கி
ஜீரகமுலாக்கி
எவன்ன முலாக்கி
மஞ்சமுலாக்கி
காற்றாடி முத்தான்
காற்றுகாரிமைணன்
விரியன்
கருத்த அரிவிக்குருவி
சிறலாகி
குறுவகழையான்
கொட்டாரஞ்சம்பா
ஆனகொம்பன்
புழுதிபெரட்டி
- இவையெல்லாம் நம்முடைய பாரம்பரிய நெல்வகைகள். பார்த்துப் பார்த்து விதைத்த நம் முன்னோர்களின் வேளாண்மையின் காலங்கடந்த இச்சொத்துகள் இன்றைக்கு மறைந்துகொண்டு வருகின்றன.
இருப்பினும், ஒருசிலர் பாரம்பரியமாக இவ்விதைகளை வீட்டு உபயோகத்திற்காக இயற்கைவேளாண்மை முறையில் சாகுபடி செய்துவருகின்றனர்.
2006ம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் மே கடைசி வாரத்தில் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 18 ஆயிரம் விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் வகைகளை விநியோகித்துள்ளார்கள் என அறியப்படுகிறது.
நட்வர் சாரங்கி (77 வயது) எனும் ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தின் நரிசு கிராமத்தின் ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியர் சுமார் 400 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு, பாதுகாத்துள்ளார்.இவை விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.தமிழ்நாடு மற்றும் கேரளா விவசாயிகள் இவரிடம் இருந்து மருத்துவ குணம் கொண்ட நெல் ரகங்களைப்பெறுகின்றனர்.
உளுந்தூர்பேட்டை, ஸ்ரீசாரதா ஆசிரமம், ‘அக்ஷய க்ருஷி கேந்திரா’ (வேளாண்மை மையம்) பாரம்பரிய நெல் வகைகளில் 150 வகைகளை சேகரித்து, விழுப்புரம் மாவட்டத்து விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைநெல் இலவசமாக வழங்கிப் பயிரிட ஊக்குவிப்பதன் மூலமாகவும் பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாத்து வருகின்றது.[8][9][10][11]இதன் மூலம் பாரம்பரிய நெற்பயிரை 120 கிராமங்களைச் சேர்ந்த 1,500 பெண்விவசாயிகள் பயிரிட்டு பலனடைந்துள்ளனர்.
கர்நாடகத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ஸ்ரீனிவாசமூர்த்தி, இயற்கை விவசாய முறையின் உதவியுடன் பாரம்பரியமான 200 நெல் வகைகளைப் புதுப்பித்துள்ளார். புதுக்கோட்டைப் பகுதியில் வறட்சி மற்றும் நோய்த்தாக்குதலைத் தாக்குபிடிக்கும் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் பணியில் புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் 24 வகையான பாரம்பரியமான நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கற்பட்டு பகுதியைச் சேர்ந்த முகுந்தன், அரியன்னூர் ஜெயச்சந்திரன், திருவண்ணாமலை கலசப்பாக்கம் மீனாட்சி சுந்தரம் முதலானோர் கிச்சலிச்சம்பா, பெருங்கார் சீரகச்சம்பா ஆகிய பாரம்பரிய நெல் வகைகளைக் காப்பாற்றியுள்ளனர்.
இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம் தொண்டு நிறுவனம் நூற்றுக்கணக்கான அரிய பாரம்பரிய விதை நெல் கொண்ட விதை வங்கியை சீர்காழியில் அமைத்துள்ளது.
ஒடியாவில் இருந்து பெற்ற நெல் விதை உதவியோடு தஞ்சையில் விதை வங்கியை மாரியம்மன் கோயில் கோ.சித்தர் அமைத்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண் பல்கழைக்கழகம் பாரம்பரிய நெற்பயிர்களில் எந்த பயிர் எந்த பகுதியில் செழித்து வளரும் என்பது போன்ற தகவல்களை வழங்குகின்றது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-11-2015
#KsRadhakrishnan #KSR_Posts #Paddy

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...