Friday, November 27, 2015

தொலைக்காட்சி விவாதங்கள் - Television Debates 2



தலைமைக் கழகத்தின் இன்றைய  (27-11-2015) அறிவிப்பை ஊடகங்கள் உணரவேண்டும். குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவைத்து கேள்வி கேட்பதைப் போலவும், உரிய விளக்கங்கள் தி.மு.க சார்பில் கொடுக்க முயன்றாலும் தடுப்பதும், ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதும்தான் தொலைக்காட்சி விவாதங்களில் நடக்கின்றன.  

இதற்காகவே விவாதங்களுக்கு சமீபத்தில் அதிகமாகச் செல்வதும் கிடையாது. 

ஒருமுறை தந்தி டி.வி விவாதத்தில் திரும்பத் திரும்ப கழகத்தை ஆளுங்கட்சியைப் போன்று கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர். உரிய விளக்கங்களை நான் கொடுத்தபோதும்,  திட்டமிட்டு மறுபடியும் அதே வினாக்களைத் தொடுக்கப்பட்டது.  “விளக்கங்கள் கொடுத்தபிறகும் அதே கேள்வியை எழுப்பிக்கொண்டே இருந்தபோது” நான் மைக்கை தூக்கியெறிந்துவிட்டு அந்த விவாதத்திலிருந்து  வெளிநடப்பு செய்தேன். 

பலர் என்னிடம் இவ்வளவு கோபப்பட்டு வெளியேறிவிட்டீர்களே, தந்தி டி.வி நிர்வாகம் உங்களைத் தவறாக எண்ணிக்கொள்வார்களே என்று கேட்டபோது, அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்ல. ஊடக நண்பர்களோடு நான் நட்போடுதான் இருக்கின்றேன். அது வேறு விஷயம், ஆனால் ஒரு விவாதம்  ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு என்று பதில்சொன்னேன். 

இதுகுறித்து ஏற்கனவே என்னுடைய வலைதளத்தில் பதிவு செய்துள்ளேன். 

http://ksr1956blog.blogspot.in/2015/04/tv-channel-discussions.html 

http://ksr1956blog.blogspot.in/2015/10/television-debates.html

http://ksr1956blog.blogspot.in/2015/02/blog-post_13.html 

#KsRadhakrishnan #KSR_Posts 

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-11-2015.

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...