Saturday, April 15, 2017

இது தேர்தலா? பருக் அப்துல்லா வெற்றி.

Farooq Abdullah wins Srinagar parliamentary seat in bypolls; polled 7.5percentage...

Ha ha ha with voter turnout of 7.5Indeed a landslide victory.A true statesman of India democracy! Wah wah!!!

இது தேர்தலா? 
பருக் அப்துல்லா வெற்றி. 

ஸ்ரீநகர் தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லாவும் அவரை எதிர்த்து ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நசிர் அகமது கானும் போட்டியிட்டனர். இடைத்தேர்தல் நடந்த போது ஏற்பட்ட வன்முறையில் 8பேர்  பலியானார்கள் . இதனால்  7.13%  மட்டுமே வாக்குப் பதிவானது.  இதில் பருக் அப்துல்லா ஏறத்தாழ 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றாக அறிவிக்கப்பட்டார். 

92.87% வாக்காளர்கள் ஆதவின்றி ஒருவர்  நாடாளுமன்ற உறுப்பினராகின்றார். இதனையும்  ஜனநாயகம் ஏற்கின்றது என்பது எத்தனை கேலிக்கூத்தானது? தேர்தல் கமிசன் மீதும், சட்டத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் வீட்டிக்குள முடங்கிக் கிடந்ததற்கு பெயர் தேர்தலா?  வாக்கு மையத்தில் தனது முகவர்களை வைத்து வாக்களித்தமைக்கு பெயர் தேர்தலா? பெரும்பான்மையான என்பதின் பொருள்  வாக்களித்தவர்கள் பெரும்பான்மையான என்பது தான்? வாக்குரிமை பெற்றவர்களின் பெரும்பான்மை ஆதரவை பெற வேண்டாமா?

இதற்கு வெட்கப்பட வேண்டியது தேர்தல்  ஆணையமும் , ஜனநாயகமும் தான். இனியும் தேர்தல் முறையில் சீர்திருத்தம் கொண்டு வரப்படவில்லை எனில் தேர்தல் ஆணையும் என்பதும் ஆறாவது விரல் தான்.
#இதுதேர்தலா? 
#தேர்தல்சீர்திருத்தம்
கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
15/4/2017
#ksrposting
#ksradhakrishnanposting

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...