Tuesday, April 25, 2017

விவசாயிகளின் பாடு.

இன்று விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அனைத்துக் கட்சி கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுவிக்கப்ப பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களுடன் பணியாற்றியும், விவசாய அமைப்புக்களின் நம்பிக்கைக்கு உரியவனாகவும், 1975 ல் விவசாய கடன்களை அடைக்க தவறியதின் விளைவாக எடுக்கப்பட்ட ஜப்தி நடவடுக்கைகளை தள்ளூபடி செய்வதற்காக சட்டப் போராட்டம் செய்தவன் என்ற முறையிலும் போராட்டம் முழு வெற்றியடைய வேண்டும் என விரும்புகின்றேன்

தமிழகத்தில் விவசாயிகள் உரிமைகளுக்காக போராடியவர்களை இதுவரை தமிழக அரசின் காவல் துறை 70 விவசாயிகளை சுட்டுக் கொன்றுள்ளது.
200 விவசாயிகளுக்கு மேல் தற்கொலையாலும், வேதனையாலும் மடிந்துள்ளனர். என்னுடைய கிராமத்திலே 30.12.1980ல் அன்று நடந்த விவசாயிகள் வேலை நிறுத்தத்தில் 8 விவசாயிகளை போலீஸார் துப்பாக்கி சூட்டில் சாகடித்தனர். எங்களுடைய வட்டாரத்தில் இதுவரை 20 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

 இதற்கு பிறகும் விவசாயிகள் தங்களை உயிரை விதைத்து எதனை அறுவடை செய்ய முடியும். அவர்களின் கையிருப்பு இன்றைய போராட்டமும், நாம் அளிக்கும் நம்பிக்கையும் தான்.

ஆகாசம்பட்டு சேஷாசலம் என்று நாங்கள் அழைப்போம். ஆகாசம்பட்டு, உலக நகரமான ஆரோவில்லின் அருகே உள்ள பேரூர். இயல்பான எதார்த்தமான வெண்பாக்களை எழுதுவதில் வல்லவர் நண்பர். ‘நக்கல்’ அடிப்பதிலும் வல்லவர். அவருடைய வேதனையை பாருங்கள். விவசாயிகளின் சோகம் புரியும்.

விவசாயம்
என்ன விவசாயம்! எழவு விவசாயம்!
பொன்னு வெளையற பூமியாம்ல! – இண்ணைக்கும்
போர்வையில் பாதியே சோமனாச்சி! அன்னாச்சி!
வேர்வையில பாதி மழை!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவரா? – அழுதுண்டே
ஏக்கருக்கு நூத்தியஞ்சை எண்ணிப்பார்த் தா தெரியும் வள்ளுவனாரே!


#விவசாயம்
#விவசாயிகள்போராட்டம்
#Savefamers #saveTamailnadufarmers
#KSRpostings #KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25-04-2017

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...