Monday, May 29, 2017

கி.ரா அவர்களின் 95வது பிறந்தநாள் விழா.


பொடிக்கும்,தாடிக்கும் இடையில் அதாவது அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளுக்கும் , தந்தை பெரியாரின் பிறந்தநாளுக்கும் இடையில் செப்டம்பர் 16ஆம் தேதி பிறந்தவர் கி.ரா என அன்புடன் அழைக்கப்படும் கி.இராஜநாராயணன் அவர்கள். 
கி.ரா அவர்களின் 95வது பிறந்தநாளை முன்னிட்டு புதுவையில் கதைசொல்லி, பொதிகை- பொருநை-கரிசல் சார்பில் விழா நடைபெற உள்ளது. நீண்ட நாடகளாக எதிர்பார்த்த ஞானபீட விருது இந்தாண்டில் 95வது அகவையில்
அவருக்கு கிடைத்துவிட வேண்டும் என்று ஆவலுடன் உள்ளோம்.

தமிழகத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் தகுதியற்றவர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் முனைவர்(கெளரவ டாக்டர்) பட்டம் அளித்து வருகின்றது. மனோன்மணி பல்கலைக்கழகம் மட்டுமே கி.ராவை கெளரவித்தது.

சென்னை, மதுரை என இரு பலகலைக்கழகங்கள் மட்டுமே இயங்கி வந்த காலக்கட்டத்தில் நானும், கவிஞர் மீராவும் இவ்விரு பலகலைகழகத்தில் எது முந்திக் கொண்டு முனைவர் பட்டம் அளிக்கப் போகின்றது? என ஒருவருடன் ஒருவர் வினவிக் கொள்வோம். அவருக்கு கிடைக்க வேண்டிய டாக்டர் பட்டமும் தள்ளிக் கொண்டே போகின்றது. எதிர்ப்பார்ப்புகளுடன் காலச்சக்கரம் ஏறத்தாழ 35 ஆண்டுகள் சுழன்று விட்டன.

கி.ரா அவர்களின் பிறந்தநாள் விழா புதுவையில் சிறப்பாக கொண்டாட திட்டமிடப் பட்டுள்ளது. அவ்விழாவில் கவிஞர் மீரா அவர்களின் அண்ணம் பதிப்பகத்தின் சார்பில் அதன் உரிமையாளர் கதிர் அவர்கள்5 நூல்கள் வெளியிட உள்ளார். இந்நிகழ்ச்சியை கழனியூரான் ஒருங்கினைத்து உள்ளார்

அனைவரும் இவ்விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்.

#கிராபிறந்தநாள்விழா
#கவிஞர்மீரா
#ஞானபீடவிருது
#அண்ணம்பதிப்பகம்
#KSradhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-05-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...