Sunday, May 14, 2017

குடியரசுத் தலைவர் தேர்தல்


இந்தியா நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை சேர்ந்து 776 எம்.பிக்கள் உள்ளனர். மொத்தம் 4114 எம்.எல்.ஏக்கள் இந்தியாவில் உள்ளனர். இவர்கள் அனைவருமே குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தகுதி படைத்த வாக்காளர்கள். எம்.எல்.சி என்ற மேலவை உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமையில்லை. அதே போல மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களுக்கும் வாக்குரிமை கிடையாது. ஒரு எம்.பியின் வாக்கு மதிப்பு 708 ஆகும். மாநிலங்களின் மக்கள் தொகைக்கேற்ப எம்.எல்.ஏக்களின் வாக்கின் மதிப்பு கணக்கிடப்படும். உத்திரப்பிரதேச எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு அதிகப்பட்சமாக 708 ஆகும். தமிழக எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு அதிகப்பட்சமாக 176 ஆகும். மிகவும் குறைவாக சிக்கிம் எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு 7 ஆகும்.
மொத்தம் எம்.பிக்களின் வாக்குமதிப்பு 776 பேரின் கூட்டுத்தொகை 5,49,408 ஆகும். இந்தியாவின் மொத்த எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு 4,114 பேரின் கூட்டுத்தொகை 5,49,474 ஆகும். இதில் 50%க்கு மேல் வாக்குகளை பெற்றவர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவர். இது தான் இந்திய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் முறையும், வாக்கு கணக்கும் ஆகும்.

#ஜனாதிபதி_தேர்தல்
#குடியரசுத்தலைவர்_தேர்தல்
#indian_president_election
#ksrpostings
#ksradhakrishnanpostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்

14/05/2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...