Tuesday, May 16, 2017

ஜலாலுத்தின் ரூமியின் கவிதைகள்


ரூமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை தமிழில் என். சத்தியமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார். ஒரு அற்புதமான மொழிப்பெயர்ப்பு. காலிகோ (Calico) பைன்டுடன் வெறும் ரூ.200/- க்கு மிகவும் மலிவான விலையில் தரமான தாளில் அச்சிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மொழியாக்க கவிதையும் தமிழில் மிக எளிய புரிதலைக் கொண்டுள்ளது. 
அவற்றில் ஒரு கவிதை.

சரி தவறு என்பதற்கு
அப்பாற்பட்டதொரு
வெளி உண்டு.
அங்கு சந்திப்பேன்
உன்னை.

புல்வெளியின் மீது ஆன்மா
கவிந்திருக்கும் போது
எதையும் பேசவியலாதபடி
ததும்புகிறது இப்பிரபஞ்சம்.

மொழி
எண்ணம்
ஏன் 'ஒருவருக்கொருவர்'
எனும் பதம் கூட
பொருளற்றுப் போகிறது
அங்கே.
-ரூமி.


#ரூமியின்_கவிதைகள்
#ஜலாலுத்தின்_ரூமி
#ரூமி
#jalaluddin_rumi
#ksrpostings
#ksradhakrishnanpostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்

15/05/2017

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...