1960, 70, 80 ஆண்டுகள் வரை ELBS (The English Language Book
Society) மற்றும் Oxford University press இணைந்து மலிவு விலையில் அருமையான கட்டமைப்போடு
அனைத்து துறை சம்மந்தமான நூல்கள் பிரிட்டனில் அச்சடித்து உலகம் முழுவதும் விற்பனையானது.
பாடப்புத்தகம் மட்டுமல்லாமல் விரிவான நூல்களாக ஆயிரம், இரண்டாயிரம்
பக்கங்களாக கூட வெளியிட்டது உண்டு. மருத்துவர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும், பேராசிரியர்களுக்கும்,
வாசிப்பாளர்களுக்கும் மிகவும் பயன்பட்டது. இந்த நிறுவனத்தின் நூல்கள் தற்போது விற்பனையில்
இல்லை என்பது வருத்தமான செய்தி.
ஒருமுறை பிரிட்டனில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்திற்கு சென்றபோது
இதுகுறித்து கேட்டு ELBS நூல்கள் கிடைக்கவில்லை என்று வேதனையுடன் கேட்ட பொழுது அதை
நிறுத்திவிட்டோம். மலிவு விலை நூல்கள் கட்டுபடியாகவில்லை என்று கூறினர்.
ஆனால் மலிவு விலை நூல் என்று அதை குறிப்பிடமுடியாது. விலையுயர்ந்த
காகிதத்தால் அதன் அட்டை வான்நீல நிறத்தில் அச்சிட்டு தயாரிக்கப்பட்டிருக்கும்.
எண்ணூறு பக்க புத்தகம் கூட அப்போது ரூபாய். 25/-க்கு கிடைக்கும். இன்றைக்கும் இந்த
நூல்களை பாதுகாத்து வைத்துள்ளேன். இத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த நூலின் காகிதத்தில்
பழுப்பு ஏறுவதில்லை.
அதேபோல, சோவியத் நாட்டு நூல்களும் அப்போது மிகவும் மலிவு விலையில்
தரமாக கிடைத்தது.
#ELBS
#Oxford_University_Press
#English_language_books_society
#ksrpostings
#ksradhakishnanpostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
12/05/2017
No comments:
Post a Comment