இந்தியா டுடே, அவுட்லுக் போன்ற ஆங்கில வார ஏடுகள் வருடத்திற்கு
ஒருமுறை இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், சிறந்த கல்லூரிகள் என்று ஆய்வு செய்து
முடிவுகளை தரவரிசை அடிப்படையில் வெளியிடுகின்றன. இதில் கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி,
மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி போன்ற அனைத்து இந்திய அளவில் உள்ள கல்லூரிகள் அடங்கும்.
நானும்
கடந்த இருபது ஆண்டுகளாக கவனித்து வருகின்றேன். நான் படித்த சென்னை சட்டக் கல்லூரி குறித்து
தரவரிசை பட்டியலில் எதுவும் செய்தி வராதது வேதனையான விடயமாகும். உயர்ந்த கம்பீரமான,
பழமையான இந்த செம்மண் நிறக்கட்டிடம் பல ஆளுமைகளை
கடந்த நூற்றாண்டுகளில் உருவாக்கியது. இந்திய அரசியல் சாசனத்தினை வரைந்தவர்கள், குடியரசுத்
தலைவர், அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,
சட்ட நிபுணர்கள், பிரபல வழக்கறிஞர்கள் என பல சிறப்புகளை பெற்ற மேன்மக்களை உருவாக்கிய
இந்த கல்லூரியைப் பற்றி சிறப்பான செய்தி வரவில்லை. ஆனால் அலிகார், டெல்லி, குருசேத்திரா,
கல்கத்தா, பூனே, பாட்னா, பெங்களூரு, பம்பாய், டேராடூன் போன்ற இடங்களில் உள்ள சட்டக்
கல்லூரி குறித்து தரவரிசையில் குறிப்பிடும் பொழுது நான் படித்த பழமையான சென்னை சட்டக்
கல்லூரி சிறந்த கல்லூரியாக தரவரிசையில் இடம்பெறவில்லை என்று ஆதங்கம்.
#சென்னை_சட்டக்கல்லூரி
#சென்னை
#Madras_Law_College
#Chennai
#ksradhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
23-05-2017
No comments:
Post a Comment