Wednesday, May 10, 2017

ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.எஸ்.வாசனும் திருத்தங்கலும் & கிருஷ்ணாபுரம் அழகிரிசாமி நாயக்கர்

ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.எஸ்.வாசனும் திருத்தங்கலும்
-------------------------------------------------------------------------------------------------

நாடாளுமன்ற முன்னாள் பி. ராமமூர்த்தி (முளிச்செவல், சாத்தூர்) மூலம் சில செய்திகள் இன்றைக்கு கவனத்திற்கு வந்தது. திருத்தங்கலில் 1926ல் ஐக்கிய கம்மவார் கூட்டுறவு அச்சுக் கூடம் அமைக்கப்பட்டது. சிவகாசி அருகேயுள்ள சுக்கிரவார்பட்டி ஆர்.வீ.நாயுடு இதை நிறுவினார். இந்த அச்சகத்தில் இருந்து இதழ்களும் வெளியிடப்பட்டன. மாணவர்களுக்கான நோட்டுப் புத்தகங்கள், பேரேடுகள், சிட்டைக் கணக்குகள் அச்சிட்டு, பைண்ட் செய்து விற்பனை செய்தனர். விளம்பரப் பலகை பணிகளும் செய்தனர். அப்போது டபிள்யூ.ஆர். சுப்பாராவ் என்பவர் அற்புதமான ஓவியங்களையும் வரைவார். இவர் கோவில்பட்டி கொண்டையராஜு இளைஞராக இருந்த போது இவருடன் நட்பு பாராட்டியவர். சேலம் மாடர்ன் தியேட்டரிலும் பணியில் சேர்ந்து சிவாஜி கணேசனின் கர்ணன் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆனார். பிற்காலத்தில் அனைவரும் பாராட்டிய ஒளிப்பதிவாளர் தான் இந்த சுப்பாராவ்.
 செய்திக்கு மறுபடியும் வருகின்றேன்.

ஆர்.வீ.நாயுடுக்கு மிக நெருக்கமாக விளங்கியவர் தான் ஜெமினி, ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ். எஸ். வாசன். தன்னுடைய எழுத்துப் பணியை அச்சாக்க திருத்தங்கள் கம்மவார் அச்சுக் கூடத்தில் அச்சடிக்க தன் நண்பர் ஆர்.வீ.நாயுடுவை காண வந்தார். அதை ஆர்.வீ.நாயுடு அச்சடித்தும் கொடுத்தார். சில காலங்களில் அச்சுத்தொழிலை சரிவர கவனிக்க முடியாதபடியால் தனது இயந்திரங்களை ஆனந்த விகடன் இதழை துவக்கும் போது தனது நண்பர் எஸ். எஸ். வாசனுக்கு ஆர்.வீ.நாயுடு விற்பனை செய்தார் என்ற செய்தியை கேள்விப்பட்டேன்.
#எஸ்எஸ்வாசன்
#திருத்தங்கல்
#சிவகாசி
#ஆர்வீநாயுடு
#ஒளிப்பதிவாளர்சுப்பாராவ்
#ஆனந்தவிகடன்
#vikatan
#rvnaidu
#ksrpostings
#ksradhakishnanpostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
09/05/2017
==================================================


மற்றொரு செய்தி,
கிருஷ்ணாபுரம் அழகிரிசாமி நாயக்கர்
------------------------------------------------------------
 பழைய திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டத்தில் பருத்தி தொழிலின் வளர்ச்சிக்கு முக்கிய அடிகோலியவர் கிருஷ்ணாபுரம் அழகிரிசாமி நாயக்கர் ஆவார். சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், ஒட்டநத்தம், எட்டையபுரம், இராஜபாளையம், விருதுநகர் போன்ற நகரங்களில் பருத்தி அரவை ஆலைகளை அமைத்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளில் கப்பலில் அனுப்பப்பட்டது. அதனால் தான் தூத்துக்குடியில் இன்றைக்கும் ஒரு சாலைக்கு ‘கிரேட் காட்டன் சாலை’ என்று அழைக்கப்படுகிறது. கோவில்பட்டியில் லட்சுமி நூற்பாலையை அமைக்க காரணமானவர் கிருஷ்ணாபுரம் அழகிரிசாமி நாயக்கர். கோயம்புத்தூரின் லட்சுமி குழுமத்தை அணுகி கோவில்பட்டியில் நிலங்களை பெற்று அதற்கான அடிப்படை வேலைகளை செய்தார். இராஜகோபால் வங்கி என்று அமைத்து இதற்கு பங்குத்தொகை வசூல் செய்ய மாட்டு வண்டியில் கிராமம கிராமமாக சென்றார். கோவில்பட்டி, சாத்தூர் நகரங்களின் வளர்ச்சிக்கு அக்காலத்தில் இவருடைய பணி மிக முக்கியமானது. தமிழக முதல்வர்களாக திகழ்ந்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், குமாரசாமி இராஜாவுக்கு மிக நெருக்கமாக திகழ்ந்தார். இவருக்கு அவர்களிடமிருந்து அடிக்கடி கடிதங்கள் வரும். அதில் சில சொந்த விசயங்களையும் இவரிடம் பகிர்ந்து கொண்டதுண்டு. கூட்டுறவு இயக்க வளர்ச்சிக்கு மேடை தளவாய் குமாரசாமி முதலியாரோடு இணைந்து பாடுபட்டார். காங்கிரஸ் கட்சியில் இவரை அறியாதோர் இல்லை. வ.உ.சி க்கும் நெருக்கமாக இருந்தார். காமராஜரும் இவரை மதிப்போடு அழைப்பதுண்டு. அந்த காலத்தில் இவருடைய கிருஷ்ணாபுரம் வீட்டிற்கு சென்றால் அனைவரும் மதிய உணவருந்திய பிறகே செல்லமுடியும். காமராஜர் இவர் வீட்டு நிலக்கடலை பருப்புத் துவையலும், ரசத்தையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. எருமைத் தயிரை தான் அக்காலத்தில் பயன்படுத்துவார்கள். மோரும் எருமை மோர் தான். பசும்பால், சர்க்கரை (அ) பனங்கல்கண்டு போட்டு அருந்துவது தான் வாடிக்கை. லட்சுமி மில் ஜி.கே. தேவராஜலு இவரிடம் மதிப்போடு அன்பு பாராட்டினார். ஆனால் இவரைப்பற்றி அந்த சாத்தூர் மக்களுக்கே அறியாமல் இருப்பது வேதனை தருகிறது.

#கிருஷ்ணாபுரம்அழகிரிசாமிநாயக்கர்
#ஓமந்தூர்இராமசாமிரெட்டியார்
#குமாரசாமிஇராஜா
#காமராஜர்
#சாத்தூர்
#கோவில்பட்டி
#லட்சுமிமில்
#பருத்திஆலை
#krishnapuramalagirisamynaicker
#ksrpostings
#ksradhakishnanpostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
09/05/2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...