Thursday, May 4, 2017

பாலையம்பட்டி

பாலையம்பட்டி:
----------------
விருதுநகர் மாவட்டம் பாலையம்பட்டி ஆசிரியர் பயிற்சிப் பள்ளி இன்றைக்கு பொழிவிழந்து இருக்கிறது. இந்த கட்டடங்கள் பாலையம்பட்டி ஜமீன்தார் கட்டி பாடச் சாலையாகஉருவாக்கினார்.

இந்த பள்ளிக்கு 1969ல் சென்றதுண்டு. இந்த பள்ளியில் தலைமையாசிரியராக என் அண்ணியார் இருந்தார். ஒரு முறை அருப்புக்கோட்டை சென்றுவிட்டு, விடுதலை புலி இயக்க தலைவர் பிரபாகரன், பேபி சுப்பரமணியம் ஆகியவரோடு மதுரைக்கு திரும்பியபோது இந்தப் பள்ளி வளாகத்தில் மதிய உணவு பொட்டலங்களை பிரித்து  உண்டோம். அங்கு கட்டடங்களை பிரபாகரன் சுற்றிப் பார்த்தார். செவக்கட்டில்  அருமையான கட்டடங்களாக இருக்கிறதே என்று கூறினார்.

1982களில் ஒரு விழாவில் பழ. நெடுமாறன்,அன்றைய காமராசர் மாவட்ட திமுக செயலாளர் செ. தங்கபாண்டியன் எம்.எல்.சி., பங்கேற்றதும் உண்டு.
சமீபத்தில் அருப்புக்கோட்டையிலிருந்து மதுரை புற வழி சாலையில்
 

பயணித்தபோது இந்தக் கட்டடத்தின் உள்ளே சென்றபோது,கட்டிடங்கள் இடிபாடோடு இருப்பதைக் கண்டேன். ஒரு காலத்தில் அமைதியான மரங்கள் நிறைந்தபள்ளிவளாகமாகஇருந்தது. 
இடிபாடுகளோடு இருக்கின்ற காட்சிகள் தான் இது.
 
 
#பாலையம்பட்டிஜமீன்
#palayampatti
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
04.05.2017
   

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...