Monday, May 22, 2017

சின்னக் குத்தூசி - திருவாரூர் இரா.தியாகராஜன்.


திருவாரூரில் பிறந்த இவர் ஈ.வி.கே. சம்பத், நெடுமாறன் ஆகியோரோடு நெருக்கமாக இருந்த காலத்தில் இருந்து அறிவேன். சம்பத் திமுகவில் இருந்து விலகிய பின்னர் தமிழ்தேசிய இயங்களில் ஈடுபட்டு பணியாற்றினார்.  

திரு.நெடுமாறன் அவர்கள் ஆசியராக இருந்து நடத்திய செய்தி நாளேட்டில் சில காலம் பணியாற்றினார். 24-11-1973ம் ஆண்டு மத்திய அமைச்சர் பா.ராமச்சந்திரன் அவர்களின் தலைமையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த விழாவில், பெருந்தலைவர் காமராஜர் வெளியிட மதுரை பல்கலைக்கழக துணைவேந்தர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் இதன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். 

இந்த நிகழ்வில் செல்லப்பாண்டியன், கக்கன், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சங்கர நாராயணன், ராஜாராம் நாயுடு, குமரி அனந்தன், திண்டிவனம் ராமமூர்த்தி, தீபம். நா. பார்த்தசாரதி, குடந்தை ராமலிங்கம், கலி வரதன், சி.ஆர். சந்தானம் ஆகியோர் பங்கேற்றனர்.
மதுரை குருவிக்காரன் தெருவில் அந்த பத்திரிக்கையின் அலுவலகம் இயங்கி வந்தது. நெடுமாறன் குறிஞ்சி என்ற மாதமிருமுறை வெளியிடும் இதழையும் 1960களில் இருந்து நடத்தி வந்தார்.

பின் சென்னைக்கு இடம் மாற்றப்பட்டு மயிலாப்பூர் வள்ளுவர் சிலை அருகேயுள்ள கல்லுக்காரன் தெருவில் இருந்து செய்தி நாளேடு வெளிவந்தது. தியாகராஜனோடு அவரின் நண்பர் திருவாரூர் ஜெயபால், மயிலை புரட்சிமணி ஆகியோர் இந்த ஏட்டின் பணியில் இருந்தனர். நான் அவ்வப்போது அந்த பத்திரிக்கையின் அலுவல் பணியை சென்று கவனித்து வந்தேன். செய்தி ஏடு தினமணி நாளேடின் அச்சகத்தில் அப்போது அச்சிடப்பட்டு வெளிவந்தது.

இதே காலக்கட்டத்தில் ஸ்தாபன காங்கிரசின் ஏடான நவசக்தியும் வெளிவந்தது.

மறைந்த திரு.சின்னக்குத்தூசி அவர்களுக்கு 5வது ஆண்டு நினைவஞ்சலிகள்.

#சின்னக்குத்தூசி
#திருவாரூர்தியாகராஜன்
#KSRadhakrishnanpostings
#kSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

22-05-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...