ஆழ்ந்த இரங்கல்கள்
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி அவர்கள் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகின்றேன்.
எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு அவரை இழந்து வாடும் மாவட்ட கழகத்தினருக்கும், குடும்பத்தினருக்கும் என் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
தட்டார்மடம் எனும் கிராமத்தில், எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆரம்பத்தில் தேங்காய் சிரட்டை தொழில் செய்து வந்தார் பின்னர் கீதா ஹோட்டல்ஸ் என வணிகத்தை விரிவாக்கம் செய்து முன்னேறியவர்.
1980களில் அறிமுகமானவர். எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் பி.எச்.பாண்டியன் சட்டப் பேரவை தலைவராக இருந்த போது,இவர் தூத்துக்குடி நகர மன்ற தலைவராக இருந்தார். 1982ல் அவர் மீது கடன் கொடுத்த பணத்தை விட அதிக வட்டி வசூலிக்கின்றார் என்று வழக்கு பதிவானது. உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கை நடத்தி வழக்கில் இருந்து குற்றமற்றவர் என நிருபித்து வழக்கில் இருந்து விடுவித்தேன். அன்று எனது அறைக்கு வந்து வக்கிலய்யா என கையைப் பிடித்து மகிழ்ச்சி தெரிவித்தது நினைவிற்கு வருகின்றது. அதன் பின்னர் சென்னை வரும் போதெல்லாம் என்னை பார்க்காமல் தூத்துக்குடி செல்ல மாட்டார்.
1989 தூத்துக்குடியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இரா.கிருஷ்ணன் என்பவர் வெற்றி பெற்றது செல்லாது என வழக்கு தொடுத்தார். அந்த வழக்கிலும் வெற்றி தேடிதந்தேன்.
என் ஆழ்ந்த இரங்கல்கள்.
1983ல் கோவில்பட்டியில் எடுத்தப்படம். — with Sembakkam Jaikumar.
No comments:
Post a Comment