Wednesday, May 24, 2017

தூத்துக்குடி ஏ.பி.சி. வீரபாகு

     காங்கிரஸ் கட்சியில் 1960 மற்றும் 70களில் ஏ.பி.சி. வீரபாகு நாடறிந்த அக்கட்சியில் முன்னனித் தலைவர்களில் ஒருவராக இருந்தார். 60 ஆண்டுகளுக்கு முன்பே தூத்துக்குடியில் வ.உ.சி கல்லூரியை நிறுவி பிற்பட்ட அந்த பகுதிக்கு கல்விச்சேவையை வழங்கினார். வ.வு.சி ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரியையும் நிறுவினார்.

      இந்த ஆண்டு இவருடைய நூற்றாண்டாகும். என்னுடைய கிராமத்து வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றவர். அவருடைய மடியில் தவழ்ந்தவன் அடியேன். அவருக்கு என்னுடைய பெரியப்பா வி.இராமகிருஷ்ணன் நெருங்கிய சகா ஆவார்.
      பெருந்தலைவர் காமராஜர் நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்ட போது தேர்தல் செலவு பொறுப்பை ஏ.பி.சி யிடமும், தேர்தல் நடத்தும் பொறுப்பை பழ. நெடுமாறனிடம் ஒப்படைத்தார். அச்சமயத்தில் அந்த தேர்தலில் மாணவர் காங்கிரஸ் அமைப்பின் வழியே தேர்தல் பணி ஆற்றியது உண்டு.
      வெள்ளை வெளேரன்று கதர் ஆடையோடு எப்பொழுதும் இருப்பார். தூத்துக்குடி நகர வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர். நெல்லை மாவட்ட அரசியலில் முக்கிய புள்ளி ஆவார். அவரது புகழ் ஓங்குக.

#தூத்துக்குடி
#ஏபிசி_வீரபாகு
#வஉசி_கல்லூரி_தூத்துக்குடி
#apc_veerabaghu
#voc_college_tuticorin
#ksradhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
23-05-2017

No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...