Narshimnan narish timeline post
கடந்த சில நாட்களாக நீட் தேர்வு குறித்த பல்வேறு பதிவுகளை படிக்கும் நல்ல வாய்ப்பு அமைந்தது. இன்னும் சிறப்பாக சொல்லியிருக்கலாம் என்ற ஏக்கமும் இருந்தது. குறிப்பாக சி.பி.எஸ்.சி கமிட்டி மீதான கோபம் பார்ப்பனர்கள் மீதும் அ(வ)ம்பாக பாய்ந்தது.
திமுகவின் சமூக நீதி குறித்து அறிந்துக் கொள்ள , வாசிக்க விருப்பம் உடையவர்கள்
"அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 2009 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் #திமுக_சமூக நீதி எனும் புத்தகத்தை தலைமைக் கழகம் வெளியிட்டது. தலைவர் கலைஞர் அவர்களின் ஆலோசனையில் பெயரில் அண்ணன் K S Radhakrishnan அவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொகுத்து எழுதினார்". அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் 100பக்கங்களை கொண்ட அந்த புத்தகம் மிக மலிவாக ரூபாய்20க்கு விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
அந்த புத்தகத்தில் 1927 ல் சுப்புராயன் அவர்களின் ஆட்சிகாலத்தில், முத்தையா முதலியார் கல்வியமைச்சராக இருந்த போது வகுப்புவாரி அரசானை முதல் தந்தைப் பெரியார் அவர்களின் பிரச்சாரம், அறிஞர் அண்ணா , தலைவர் கலைஞர் என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் படிப்படியாக இடஒதுக்கிடு உயர்ந்து மணடல்கமிஷன் வரை விளக்கப்படுள்ளது.
தலைவர் கலைஞர் அவர்களே புத்தகத்திற்கு அணிந்துரை எழுதியிருக்கின்றார்.
குறிப்பு: இந்த புத்தகத்தை நீங்கள் வாங்குவதால் பயனடையப் போவது வாசிப்பாளரான நீங்களும் விற்பனையாளரான தலைமைக் கழகமும் தான், தவிர அண்ணன் KSR அவர்களை நான் ப்ரமோட் செய்வதாக கருதினால் கம்பனி பொறுப்பல்ல.
( முகனூலில் உத்வேகமாக செயல்படும் சில தம்பிகளுக்கு நானே இன்பாக்ஸ் வழி முகவரி பெற்று அனுப்ப உள்ளேன்)N
No comments:
Post a Comment