பயனளிக்காத தொலைக்காட்சி வெட்டியான விவாதங்களும் கால விரயமும்.
-------------------------------------
சமீபகாலமாக தொலைக்காட்சி விவாதங்கள் கண்ணியமற்ற முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நாட்டுக்கு நன்மை பயக்காத, ஆரோக்கியமற்ற விவாதங்களில் கலந்துக் கொள்வதை தவிர்த்து வருகின்றேன். அதே சமயத்தில் அன்புக்கூர்ந்து அழைக்கப்படும் போது என்ன கருப்பொருள், யாருடன் விவாதிக்க போகின்றோம், யார் நெறியாளர் என்பதை எல்லாம் அறிந்த பின்னரே விவாதத்தில் கலந்துக் கொள்வது குறித்து முடிவு எடுக்கின்றேன்.
எந்த வகையிலும் பயனளிக்காத தலைப்புகள், கண்ணியமற்ற பேச்சாளர்கள், விவாதத்தை ஆரோக்கியமாக கொண்டு செல்லாத நெறியாளர்கள் , கருத்தை சொல்லும் போது வேண்டுமென்றே குழப்பம் விளைவிக்கும் எதிர் கேள்விகளை வைக்கும் தொலைக்காட்சி பணியாளர்கள் நம்மை சில சமயங்களில் கொதிப்படைய வைக்கின்றன.
அவ்வாறு நெறியற்ற முறையில் விவாதம் நடத்தப்படு போது விவாதத்தில் இருந்து முதன் முதலாக வெளிநடப்பு செய்து கண்டனத்தை பதிவு செய்ததும் அடியேன் தான்.
விவாதத்தின் அடிப்படையில் நமது கருத்தை முன்வைக்க அனுமதி மறுக்கும் போதோ அல்லது திட்டமிட்டே இடையூறு ஏற்படுத்தும் போது நாம் விவாதத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதில் தவறு இல்லை. விவாதத்தில் வெளிநடப்பு செய்வதால் நாம் தோல்வியடைந்ததாக கருதுகின்றார்கள். நிச்சயம் இல்லை. கருத்தை முன்வைக்க அனுமதிக்கப்படாத போது அங்கு நாற்காலியை நிரப்ப நாம் எதற்கு அவர்களுக்கு பயன்படு பொருளாக காட்சியளிக்க வேண்டும். அப்படியென்ன அவர்கள் தொலைக்காட்சி வாயிலாக நம் முகத்தை காட்டி பிரபலம் அடைய வேண்டிய அவசியம் என்ன இருக்கின்றது?
பெரும்பாலான விவாதங்கள் பிரச்சனைக்கு காணும் வழியையோ அல்லது அதற்கான வழிமுறைகளையோ பற்றி பேசுவதில்லை. வெட்டியாக கூடி கலைகின்றனர்.
நேரத்தை விரயம் செய்யும் இதுபோன்ற விவாதங்களும் , தொலைக்காட்சி விவாதங்களும் மக்களின் அறிவுக் கூர்மையை பாழ்படுத்துகின்றன.
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.
#தொலைக்காட்சிவிவாதம்
#ஆரோக்கியமற்றவிவாதத்தில்வெளிநடப்பு
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
24-05-2017
No comments:
Post a Comment