Tuesday, May 9, 2017

இலங்கையை குறித்து இந்தியா சம்மந்தமான சமீபத்திய இரண்டு செய்திகள்.

திரிகோணமலை எண்ணெய் கிடங்கு.
------------------------------------------------------------

இந்திய பிரதமர் மோடி இலங்கை செல்ல இருக்கின்றார். திரிகோண மலையில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நிர்வகிக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஜப்பானும் இணைய வாய்ப்புள்ளது.
அமெரிக்காவும், சீனாவும் திரிகோணமலையில் எண்ணெய் கிடங்குகளை அமைக்க கடுமையாக முயல்கின்றது. இந்த முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 2ம் உலகப் போர் காலத்தில் இருந்தே 99 எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் திரிகோணமலையில் உள்ளது. அவற்றில் 73 கிடங்குகளை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நிர்வகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே 14 கிடங்குகளை இந்தியன் ஆயில் நிறுவனம் நிர்வகித்துக் கொண்டு வருகிறது.

வங்கக் கடலில் இலங்கை எல்லைப் பலகையை அமைத்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------

தமிழக மீனவர்களை தடுக்க கூடிய வகையில் வங்க்க கடலில் ஐந்தாவது மணல் திட்டில் இலங்கை நாட்டின் கொடிப் படத்தோடு கூடிய எல்லை பலகையை இலங்கை அரசு திடீரென வைத்துள்ளது. இது எதிர்பாராத நடவடிக்கையாகும். கடல் எல்லையை அறியாத மீனவர்கள் தங்களுடைய வலையை வீசும் பகுதி அனைத்தும் கடல் மாதா கொடுத்த அருட்கொடை என்றே நினைக்கிறார்கள். இப்படியான நிலையில் எல்லைப் பலகைகளை வகுப்பது சரியா, தவறா என்று தெரியவில்லை.


#இலங்கை
#திரிகோணமலை
#தமிழகமீனவர்கள்
#ஈழத்தமிழர்
#srilanka
#trincomalee
#tamilfisherman
#ksrpostings
#ksradhakishnanpostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
09/05/2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...