Wednesday, January 3, 2018

பாகிரிசன்ஸ் புத்தகக் கடை

டெல்லியில் *பாகிரிசன்ஸ் புத்தகக் கடை* பிரபலம். இது கான் மார்க்கெட்டில் இருக்கிறது. இதன் கிளைகளும் டெல்லியின் சில இடங்களில் உள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாகி *மிதிலேஷ் சிங்* என்னுடைய நீண்டகால நண்பர்.
சில நாட்கள் டில்லி ஜவகர்லால் நேரு (JNU) பல்கலைக்கழகத்தில் படிக்கக் கூடிய வாய்ப்பு 1975 காலகட்டங்களில் கிடைத்தது. சென்னை சட்டக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்ததால் ஜவகர்லால் நேரு (JNU) பல்கலைக்கழகத்தில் இருந்து சென்னைக்கு திரும்பிவிட்டேன். சிலரை நம்பி நான் செய்த தவறுகளில் இதுவும் ஒன்று. அப்போதுதான் இந்த புத்தகக் கடை அறிமுகம்.
டெல்லிக்கு சென்றால் இந்த கடைக்கு செல்வது வாடிக்கை. இந்த கடையில் தான் முதன்முதலாக குல்திப் நயார், குஷ்வந்த் சிங், ஷோபாடே, தவ்லீன் சிங் போன்ற பிரபலங்களை எல்லாம் பார்க்கக்கூடிய வாய்ப்பு இந்த கடை மூலம் கிடைத்தது. இன்னொரு புத்தகக் கடை கென்னட் ப்ளேஸ் (Connaught place) ஜெயின் புக் ஸ்டாலும், மதராஸ் ஹோட்டலின் கீழே உள்ள சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சியும் குறிப்பிடத்தக்கது.
அருமையான புத்தககங்களின் தொகுப்புகள் இங்கு காணலாம். இன்றைக்கு ஆன்லைனில் தான் இத்தகைய நூல்கள் கிடைக்கின்றன. அந்த காலத்தில் இது போன்ற நூல்களை வாங்குவதற்கு இந்த கடைக்கு தான் செல்ல வேண்டும். டெல்லிக்கு போனால் இந்த கடைக்கு போகாமல் வருவதில்லை. எப்போது நான் சென்றாலும் மிதிலேஷ் என்னோடு 10 நிமிடங்கள்வது தேநீரோடு உரையாடுவார். முதன்முறையாக டெல்லிக்கு சென்றபோது இந்த கடைக்கு சென்றேன்.
No automatic alt text available.
டெல்லிக்கு முதன்முதலாக சென்றபோது மற்றொரு இடம் நாடாளுமன்றம் . நாடாளுமன்றத்துக்கு 45 வருடங்களுக்கு முன்னர் சென்றாலும் இன்னும் உறுப்பினராக செல்லமுடியாத சூழல் இருக்கின்றது. நான் நாடாளுமன்றம் இதுதான் என்று அடையாளம் காட்டியவர்கள் எல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்களாகி உள்ளனர். அடியேனுக்கு அந்த வாய்ப்பு ஏனோ கிட்டவில்லை. ஏனென்றால் அரசியலில் தகுதியே தடை என்பது அனைவரும் அறிந்ததே.
முதன்முதலாக டெல்லிக்கு சென்றபோது பீகாரைச் சேர்ந்த தாரகேஸ்வரி சின்ஹா தான் என்னை நாடாளுமன்றத்துக்கு அழைத்துச் சென்றார். ஸ்தாபன காங்கிரஸின் தலைவர்களில் ஒருவரான இவர், அனைவரும் நன்கறிந்த புகழ்பெற்ற மேடைப்பேச்சாளர். இந்தியிலும், ஆங்கிலத்திலும் அருமையாக உரையாற்றக் கூடியவர். பல ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் சென்னைப் பக்கம் வந்தால் அவருடன் இருப்பது வாடிக்கை.
Bahrisons! Since 1953, nurturing generations of readers from different walks of life for 65 long years.

*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*

02-01-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...