Tuesday, April 7, 2020

*கரானா * *covid19 aftereffect *

*கரானா * *covid19 aftereffect *
————————————
கரானா ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14க்கு பிறகு இயல்புநிலை திரும்ப வேண்டும். ஆனால் எதையும் உறுதியாக சொல்ல இயல வில்லை.  முழுமையாகக் கட்டுப்படுத்திவிட்டோம் என்ற சீனாவில் சிலருக்கு தற்போதும் தொற்று இருப்பதாகச் சொல்கிறார்கள். ஓரளவிற்குக் கட்டுக்குள் வந்த ஜெர்மனியில் இன்றைக்குத்‌ திடீரென அதிகம் பேருக்குத் தொற்று இருப்பதாக செய்திகள்‌ வருகிறது. இந்தியாவிற்கு ஊரடங்கு நீட்டிப்பு மிக அவசியம் எனவும்
கருத்து உள்ளது. இந்தச் சூழலில்  ஊரடங்கை  நீட்டித்தால்; அதன் முன், நிலை குறித்து சிந்திப்பதும், அடிப்படைத் தேவைக்கு உத்தரவாதம் ஏற்படுத்தித் தருவதும்  அவசியமான கடமை.




இருப்பினும்,
ஏற்கனவே Post Corona Economic
Crisis நம்மை ஏற்கனவே பாதிப்பில்
ஆழ்த்தியது. தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு மாத ஊதியம் குறைக்காமலும்  குறிப்பிட்ட நாட்களுக்குள் கிடைத்தால் தான் அவர்கள் நிம்மதியாக இருக்க முடியும். தனியார் நிறுவனங்கள் lay-off என்று அறிவிப்புகள் செய்யாமல் கவனிக்க வேண்டும். கரானா இன்னும் எத்தனை பேரை பாதிப்புக்கு ஆட்படுத்தப் போகிறதோ என்பதை எண்ணிப் பார்க்க முடியவில்லை. இதனால் IT, tourism, hotel industry அதைச் சார்ந்த நிறுவனங்கள், தொழில்கள் முழுவதும் பாதிக்கப்படும். இந்த பாதிப்பு 25 வயதிலிருந்து 45 வயதுள்ள வேலையிலுள்ள மக்களுக்கான சிக்கலை மேலும் உருவாக்கக் கூடிய நிலை வரலாம் என்பதையும் கவனிக்க வேண்டும். 

மிடில் கிளாஸ் என்ற நடுத்தர குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்களின் வாழ்க்கை நிலை என்னாகுமோ என்பது கேள்விக் குறி தான். ஏற்கனவே பாதிப்பில் உள்ள சில நிறுவனங்கள் திவாலாகும் போது அதில் முதலீடு செய்தவர்கள் நிலை என்னாகும் என்பதையும் கவனிக்க வேண்டும். அதில் அவர்கள்  அதை நம்பி வாழ்கையை நடத்த வேண்டிய நிலைமையில் உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் 60 வயதை கடந்தவர்களாக இருப்பார்கள். தினக்கூலித் தொழிலாளி நிலைமையும்
முக்கியமாக கவனித்தில் வேண்டும். சிறு
தொழிகள் பாதுகாப்பு மற்றும் குடிநீர்,மருத்துவம், கல்வி துறையில்
பாதிப்பும் வந்து விட கூடாது.

மக்கள் தொகை அதிகம்  கொண்ட கரானா நோயை எதிர்கொண்டுள்ளது. ஏற்கனவே 2008-09ல் உலகளவில் நிதிநெருக்கடி என்ற போது இந்தியாவும் தத்தளித்தது. அதே போன்ற நிலை மீண்டும்  ஏற்படலாம். கோவிட் -19 எதிர்கொள்வதோடு நமது பொருளாதாரத்தை மேம்படுத்த மறு தொடக்கமும் சில கசப்பான அறிவிப்புகளும் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப் படலாம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போவதையும் உற்பத்தியாளர்களுடைய பொருட்களை சந்தைமயத்திற்குள்ள சிக்கல்களையும் கவனத்தில் கொண்டு அதற்கான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். ஊரடங்கு பீதியில் பலருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டாலும்  இந்த காலக்கட்டத்தை எதுவரை கடக்க வேண்டும் என்று தெரியவில்லை. குறிப்பாக உணவுப் பொருள்களின் உற்பத்தியை பெருக்க வேண்டிய நிலை, கிராமப்புற விவசாயிகளுடைய நலன்களையும் மனதில் கொண்டு கடமைகளை ஆற்ற வேண்டிய நிலையில் இருக்கின்றோம். இந்நிலையில் நோயை எதிர்கொள்வது,இளைஞர்களின் வேலை பறி போகாமல் உரிய ஊதியத்தோடு பாதுகாப்பளிப்பது, தொழில்கள் முடங்காமல் உற்பத்தியைப் பெருக்கி சந்தைமயத்தையும்பாதுகாப்பது,
நாட்டின் விவசாயத்தையும் உணவுப் பொருள் பால் உற்பத்தியையும் மேமபடுத்த வேண்டிய காரணிகள் இன்று நம் முன் நிற்கின்றன. இதற்கு அடிப்படை காரணமான மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது அனைவரின் கடமையும் கூட. இவ்வளவு நோய்கள் தாக்குதல் நடத்தினாலும் நமக்கான நல்லது என்னவென்றால் நோயை எதிர்கொள்ளும் எதிர்ப்புச் சக்தி அதிகம் அதுமட்டுமல்ல நமது சீதோஷண நிலையும் மற்ற நாடுகளை விட. இந்த ஊரடங்கு உத்தரவால் காற்றிலும் தண்ணீரிலும் மாசு குறைந்து விட்டது என்பது நல்ல ஆறுதலான செய்தி. இப்படி வருடத்திற்கொரு முறை குறைந்தபட்சம் கார்களையும் வேறு வாகனங்களையும் பயன்படுத்தாமல் இருந்தால் நமது ஆரோக்கியத்திற்கு பூமிக்கும் நல்லது. பூமி வெப்பமயமாதல் தடுக்கப்படும். இந்த கரானா நோயினால் சர்வதேசத்திற்கும் ஒரு பாடமாக அமைந்து விட்டது; என்னவெனில் ஒரு நாட்டின் மீது ஆதிக்கம், பகைமை, ஊடுருவாமல் நட்போடு சர்வ தேசத்தையும் போற்றுவோம் என்ற படிப்பினையை அனைத்து நாடுகளும் பெற்றுள்ளது. இதற்கு மேலும் பன்னாட்டு அரசியலில் வம்பு தும்பு செய்தால் அவை திருந்தாத ஜென்மங்களே.

இந்த 21 நாட்கள் ஊரடங்கை ஒரு விடுமுறைக் கொண்டாட்டமாகவே அணுகுகிறது. விடுமுறையில் அம்மா, அப்பாவுடன் வீட்டில் இருக்கிறேன் மணிக்கு ஒரு தடவை ருசியான உணவு கிடைக்கிறது என்று அது முகநூலில் மகிழ்ச்சிப் பொங்குகிறது என்று இல்லாமல் நமது நலம் மற்றும் பாதுகாப்பு மேலும் சமுதாய நலன், நாட்டின் சிக்கலை பற்றி சிந்திப்போம்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
07.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது இன்று

———————————————————-  இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து. இதில்   தமிழர்கள்    அதிகம்   வாழும்பகுதி யாழ்ப்பாணம்   இங்கு   6. எம்பிக்கள்,...