Saturday, April 25, 2020

Varane_Avashyamund #மலையாளம்

#Varane_Avashyamund #மலையாளம்
———————————————-
வாழ்க்கைத் துணையை Matrimonial site மூலமாக தேடிக்கொண்டிருக்கும் கதாநாயகி, Single mother ஆன தன் தாய் விரும்பும் நபரோடு ஒரு தேனீர் விடுதியில் அவர்களின் எதிர்கால வாழ்க்கை குறித்து உரையாடி பின்னர் நாட்டிய நிகழ்வைக் காண  இருவருக்கும் டிக்கட்டுகள் எடுத்து அனுப்புகிறார்.

முதிர்ச்சியும்,தெளிவும்,,எளிமையும் புலப்படுகிறது. இப்படி ஒரு காட்சி தமிழ் சினிமாவில் அமைய இன்னும் நாள் ஆகலாம்.

ரம்மியமான சாரலில் காலார இப்படிக் நடப்பதும் மனதுக்கு இதமாக இருக்கு.
அப்போது நாயகனின் மன ஓட்டம் 



தமிழ் சினிமாவில் எம்ஜியாரின் (வாலியின்) பாடல் நினைவுக்கு வருகிறது.

‘’நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ

மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ
மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ
மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ

புருவமொரு வில்லாக பார்வையொருக் கணையாக
புருவமொரு வில்லாக பார்வையொருக் கணையாக
பருவமொரு களமாகப் போர் தொடுக்கப் பிறந்தவளோ
குறு நகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
குறு நகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்

தேன் சுவையைத் தான் குழைத்து
கொடுப்பதெல்லாம் இவள் தானோ
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ
பவழமென விரல் நகமும் பசுந்தளிர் போல் வளை கரமும்
தேன் கனிகள் இருபுறமும் தாங்கி வரும் பூங்கொடியோ

ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ
ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக வாய்மொழி தான் மலர்ந்தவளோ
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ
செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன் தகட்டில் வார்த்து வைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்
மடல் வாழைத் துடையிருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க
மடல் வாழைத் துடையிருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகியென்பேன்’’

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
25.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...