Wednesday, February 10, 2021

#கே_எம்_வேங்கடராமையா


——————————————————-
சென்னையை அடுத்த, போரூர் அருகே உள்ள காரம்பாக்கத்தில் பிறந்தவர், கே. எம். வேங்கடராமையா. இவரது தாய்மொழி தெலுங்கு என்றாலும், தமிழ் ஆர்வம் காரணமாக, பி.ஓ.எல்., (Bachelor of Oriental Languages) தேர்ச்சி பெற்றார்.
கடந்த, 1981-ல், தஞ்சை தமிழ் பல்கலை துவக்கப்பட்டபோது, கையெழுத்து சுவடித் துறையின் முதல் தலைவராகப் பொறுப்பேற்றார். இந்திய மொழிகள் ஆய்வு நிறுவனம் மற்றும் திருவனந்தபுரம் பன்னாட்டு திராவிட மொழியியல் கழகம் ஆகியவற்றில் பணியாற்றினார்.

வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும், சைவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, வரலாற்றுப் புலமை, தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.
திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லுாரியின் முதல் முதல்வராகப் பொறுப்பேற்று, 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். 'இலக்கியக் கேணி, கல்லெழுத்துக்களில் ஆய்வுப் பேழை, நீத்தார் வழிபாடு' உட்பட, 20-க்கும் மேற்பட்ட நுால்கள் எழுதியுள்ளார். 1995 ஜன., 31ம் தேதி, தன், 83வது வயதில் காலமானார். இன்று அவருடைய நினைவு தினம்.
என் மீதும் அன்பு கொண்டவர். கி.ராவை போற்றுபவர். தமிழ் மொழியை இறைசக்திக்கு ஒப்ப வழங்குபவர். நானறிந்த நல்ல தமிழறிஞர்.

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...