Saturday, November 30, 2024
தகுதியான சிலர் தன் நிலையை தக்க வைக்கவே இங்கு போராட்டம். இங்கு தகுதியேதடை… மேடையில் கத்துகிறது ஆட்காட்டி பிணமாய்க் கிடக்கிறது அரசியல்…! இந்த வாரிசு அரசியலும் குலத்தொழில்தான்.
Friday, November 29, 2024
என்வழக்கில் சாட்சியில்லை
என்வழக்கில் சாட்சியில்லை எனது பக்கம் யாருமில்லை சட்டம்தரும் சலுகைகூட சமுதாயம் தரவில்லையே மரணம் வந்தால் தெரிந்து விடும் நான் மனிதன்….
தண்ணீர் தணல் போல் எரியும் செந்தணலும்
தண்ணீர் தணல் போல் எரியும் செந்தணலும் நீர் போல் குளிரும் நண்பனும் பகைபோல் தெரியும் அது நாட்பட நாட்பட புரியும்..!
நணபர் இந்திரா சௌந்தர ராஜன் திருநாடு
நணபர் இந்திரா சௌந்தர ராஜன் திருநாடு
திருவரங்கன் திருவடி சென்று விட்டார். ஆழ்ந்த இரங்கல்*உடம்பால் முடியாத ஒருவருக்கு*
*உடம்பால் முடியாத ஒருவருக்கு*
*காமம் தர பெண்* *நினைத்தால் எப்படியும் தந்துவிடுவாள்*.. *தனக்கு வாகான ஒரு பெண்ணை எப்போதும் ஆண் தான் தேடுகிறான்*. பெண் அப்படி அல்ல அத்தனை வாகுவிற்கும் தன்னை வளைந்துக்கொடுக்கிறாள். அதற்கு அவள் காணிக்கையாகக் கேட்பது வாழ்வுதோறுமான பொருளாதார பாதுகாப்பையும், அவனிடமான மொத்தக் காதலையும் மட்டுமே ..!! நண்பர் நெப்போலியன் குடும்பத்தின் சலசலப்பு தீரட்டும்.. அவர்களது வாழ்வு அவர்தம் வாழட்டும்..!!கனடாவில் நடந்த தீபாவளி கொண்டாட்டங்களின் போது அதன்
கனடாவில் நடந்த தீபாவளி கொண்டாட்டங்களின் போது அதன் #அதிபர் ட்ருடோ #காலிஸ்தானுக்கு ஆதரவான ஆட்களும் அதை ஒட்டிய தீவிரவாதிகளும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள் என்று அவர் தனது வாயாலே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
#ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 10-11-2024.சிலரால் நம்பி வீழ்ந்து எழுவதில் இருக்கு நேர்மை..
சிலரால் நம்பி வீழ்ந்து எழுவதில் இருக்கு நேர்மை..
எழுந்து வாழ்வதில் இருக்கு திறமை..அரசு நிர்வாகம் படு தோல்வி அடைந்து உள்ளது. மக்கள் அலைக்கழிப்புச் செய்யப்படுகிறார்கள். ஆட்சியாளர்கள் உணரவே இல்லை.
அரசு நிர்வாகம் படு தோல்வி அடைந்து உள்ளது. மக்கள் அலைக்கழிப்புச் செய்யப்படுகிறார்கள். ஆட்சியாளர்கள் உணரவே இல்லை.
#உச்சநீதிமன்றதீர்ப்பு #தனியர்நிலங்களஆர்ஜிதம்
All you have to decide is what to do do with the time that is http://given
All you have to decide is what to do do with the time that is http://given.You can rise from http://anything.You can completely recreate yourself.Nothing is http://permanent.You’re not http://stuck.You have choice you can think new http://thoughts.You can learn something http://new.You can create new habits.All that matters is that you decide today and never look back. And prove yourself to yourself not to others.....
#ksrpost 10-11-2024.மக்கள் நலனுக்காக ஒரு நோக்கத்திற்காக எடுக்கப்பட்டு அந்த நோக்கத்திற்கு பயன்படுத்தாமல் வேறு ஒரு நோக்கத்திற்கும் பயன்படுத்தியது உண்டு. இதுவும் நீதிமன்றங்களுக்கு வழக்காக வந்தன.
மக்கள் நலனுக்காக ஒரு நோக்கத்திற்காக எடுக்கப்பட்டு அந்த நோக்கத்திற்கு பயன்படுத்தாமல் வேறு ஒரு நோக்கத்திற்கும் பயன்படுத்தியது உண்டு. இதுவும் நீதிமன்றங்களுக்கு வழக்காக வந்தன.
அண்மையில் சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் அளித்த தீர்ப்பில் கிருஷ்ணய்யர் தீர்ப்பு சரியானது அல்ல. நிலங்களை தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவரை அரசாங்கங்கள் எடுத்துக் கொள்வது நியாயம் கிடையாது என 97 பக்க தீர்ப்பு அளித்தது. நில ஆர்ஜித சட்டத்தில் அதற்கென தகுந்த காரணங்களை வகுத்துக் கொண்டுதான் தனியார் நிலங்களை ஆர்ஜிதம் செய்ய வேண்டும் என்ற கிருஷ்ணய்யர் அமர்வு கொடுத்த தீர்ப்புக்கு மாறாக தீர்ப்பை தந்தது. கடந்த காலத்தில் கிருஷ்ணய்யர் அமர்வில், நிலம், வீடு முதலிய அனைத்து சொத்துக்களும் நாட்டின் பொது சொத்துக்களாகக் கருதப்பட வேண்டும், பொதுமக்கள் நலனுக்கு தேவைப்பட்டால் தனியார் சொத்துக்களை அரசு விரும்புகின்ற இழப்பீடுகளைக் கொடுத்து நிலத்தை எந்தவித தடையும் இல்லாமல், தாராளமாக ஆர்ஜிதம் செய்யலாம் என்ற தீர்ப்பு இன்றைக்கு செல்லுபடி ஆகாத நிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமயிலான தீர்ப்பு வந்துள்ளது. நீதிபதி கிருஷ்ணய்யர், அரசாங்கம் ஒரு சொத்தை மக்கள் நலனுக்காக ஆர்ஜிதம் செய்துவிட்டால், அந்த சொத்தில் எந்த விதமான உரிமையோ, சொத்துக்கான பந்தமோ உரிமையாளருக்கு இருக்க முடியாது என்று தெளிவாகச் சொல்லியிருந்தார். மேலும், தனி நபர்கள், தனி நிறுவனங்கள்ளைக் காட்டிலும் சமூக நலன் முக்கியம் என்ற கிருஷ்ணய்யரின் கோட்பாட்டின் ( Iyer’s doctrine) அடிப்படையில் வி.ஆர்.கிருஷ்ணய்யரின் தீர்ப்பு அன்று இருந்தது. ஆனால், அன்றைய காலகட்டங்களில் அந்தக் கோட்பாடு, அந்த நெறிமுறைகள் பெரிதாக மதிக்கப்பட்டாலும், இன்றைக்கு உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல் வந்துவிட்டது. இன்றைய நிலையில் அதைச் சிந்திக்க வேண்டும் என்று சமீபத்தில் வந்த தீர்ப்புக் கூறுகிறது. கிருஷ்ணய்யர் தீர்ப்பு 1977 இல் அவசரநிலை காலத்தில் அளித்த தீர்ப்பாகும். அந்த தீர்ப்பு 42வது அரசியல் சாசன திட்டத்தில் இந்திராகாந்தி கொடூரமாக கொண்டு வந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சோசியலிசம் என்ற நிலையில் அந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. கிருஷ்ணய்யர் ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த சென்னை ராஜதாணியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் இம்எம்எஸ தலைமையில் அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த தீர்ப்பை மாற்றி அமைக்கக்கூடிய வகையில் சமீபத்திய டி. ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பு, கிருஷ்ணய்யரின் தீர்ப்புக்கு மாறாக உள்ளது. அதாவது, அரசாங்கம் தங்களுக்கு ஏற்றவாறு தனியார் நிலங்களையோ, சொத்துக்களையோ இனிமேல் ஆர்ஜிதம் செய்ய முடியாது என்று தீர்ப்பை வழங்கியுள்ளது. கிருஷ்ணய்யருடைய சோசலிசம், மக்கள் நலன் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், தனியார் சொத்துக்கள் எவ்வளவு சிரமப்பட்டு, அதை காலங்காலமாக விவசாய நிலங்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும் என்று சந்திரசூட் கூறியுள்ளார். இந்த நிலையில் 1986இல் மகாராஷ்டிரா அரசு, மும்பையில் பொதுமக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க ஹவுசிங் ப்ராஜெக்ட் என்று சில தனியார் நிலங்களை கையகப்படுத்தியது. அதை எதிர்த்து, அந்த நிலங்களின் சொந்தக்காரர்கள் ஒரு சங்கம் அமைத்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கு மனு தாரர்களுக்கு எதிராக தள்ளுபடி ஆனது. அதற்கு மேல்முறையீடாக 1992-ல், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்குகள் உட்பட மேலும் பல்வேறு நில ஆர்ஜித வழக்குகளை எல்லாம் சேர்த்து 2002-ல் 9 நீதிபதிகள் இடம்பெற்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி சந்திரசூட், ரிஷிகேஸ் ராய், நாகரத்னா, சுதன்சு துலியா, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, ராஜேஷ் பிந்தல், சுரேஷ் சந்திர சர்மா, அகஸ்டின் ஜார்ஜ் மைஸ் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டு, அண்மையில் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இதில், சந்திரசூட் உள்பட 7 நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பை வாசித்தனர். இதில், கிருஷ்ணய்யருக்கு எதிராக, தீர்ப்பில் சொல்லப்பட்ட வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாது என இந்த வழக்கில் இருந்த பெண் நீதிபதி நாகரத்தினா தனி தீர்ப்பு வழங்கினார்,மற்றும் ஹார்ஸ் ஆகியோர் தங்களுடைய எதிப்பினைத் தெரிவித்துள்ளனர். நீதிபதி ராய், ஆக்கப்பூர்வமான, எதிர்நோக்குப் பார்வையில் இயற்கை வளத்தை மனதில்கொண்டு அறிவுபூர்வமாக வழங்கப்பட்ட தீர்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இடத்தில் முக்கியமான ஒன்றைப் பதிவு செய்யவேண்டும். காங்கிரஸ் மத்தியில் ஆண்டபோது பிரதமர் மன்மோகன் சிங் காலத்தில் சிறப்புப் பொருளாதாரகருத்து சுதந்திரம் என;
கருத்து சுதந்திரம் என;
தெரியாத ஒருவரை வா போ என்று அழைப்பதும் தெரியாத ஒருவரின் வாழ்க்கையைப் பற்றி விமர்சிப்பதும் முகத்திற்கு நேராக பேச வக்கில்லாமல் முதுகுக்குப் பின் அவரை இகழ்வதும் உருவ கேலி செய்வதும் தான் உன் கருத்து சுதந்திரம் எனில் அதனை தடை செய்யப்பட வேண்டிய ஒரு நச்சுசெடி...திமுக 2026 இல் நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தல் குறித்துத் தான் பதற்றம் அடைந்திருக்கிறது!
திமுக 2026 இல் நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தல் குறித்துத் தான் பதற்றம் அடைந்திருக்கிறது!
ஏனென்றால் விஜய் அரசியலுக்கு வந்து விட்டார்! திமுகவிற்கு விரைவில் வரவிருக்கிற உள்ளாட்சித் தேர்தல் குறித்து எந்த அக்கறையும் இல்லை! அதை வைத்துப் பார்க்கும் போது வரப்போகும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதில் திமுக சற்றே குழப்பமும் அச்சமும் அடைந்திருக்கிறது. @tvk #ksrpost 9-11-2024*"பேரறிஞர் அண்ணா கொள்ளு பேத்தி திருமண விழாவை புறக்கணித்து வரலாற்றுப் பிழை செய்த திராவிட கட்சிகள்."*
*"பேரறிஞர் அண்ணா கொள்ளு பேத்தி திருமண விழாவை புறக்கணித்து வரலாற்றுப் பிழை செய்த திராவிட கட்சிகள்."*
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், திராவிட இயக்கத்தின் ஆளுமை மிக்க முன்னோடியான பேரறிஞர் அண்ணா அவர்களின் (வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளம் அண்ணா வழி) பேத்தியும், இந்திய தூதரகத்தில் பணியாற்றி வரும் ஐஎப்எஸ் அதிகாரியுமான மு.பிரித்திகா ராணி, ராஜஸ்தான் மாநிலத்தில் துணை ஆட்சியராக உள்ள ஐஏஎஸ் அதிகாரியான சித்தார்த் பழனிச்சாமி ஆகியோரது திருமணம் தடபுடலாக இல்லாமல், அச்சு, காட்சி, சமூக வலைதள ஊடகங்களின் நேரலை அலப்பறை இன்றி, முன்னாள் முதலமைச்சர் இல்ல திருமண விழா என்கிற பந்தாவோ, பரபரப்போ இல்லாது நேற்றைய (07.11.2024) தினம் மதுரையில் மிக எளிமையாக நடந்து முடிந்திருப்பது உள்ளபடியே ஆச்சரியமளிக்கிறது. ஏனெனில் "அண்ணா எங்களது உயிர் மூச்சு", "அண்ணா எங்களது இதய துடிப்பு", "நாங்கள் அண்ணா வழி வந்தவர்கள்" என்றெல்லாம் மேடைக்கு மேடை வீர வசனம் பேசி வரும் ஆளுங்கட்சி (திமுக) பிரமுகர்கள் மற்றும் அவர்களின் கட் அவுட் படையெடுப்பு இல்லாமலும், "மூச்சுக்கு முன்னூறு தடவை திராவிட மாடல் என தங்களுக்குத் தாங்களே நற்சான்றிதழ்" கொடுத்துக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என பலரும் எட்டி பார்க்கா திருமண விழா நடைபெற்றுள்ளது. ஆணி வேராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பேத்தி திருமணத்தை முன்னின்று நடத்தியிருக்க வேண்டியவர் புறக்கணிப்பு செய்ததை காணும் போது "அறிவாலயத்தின் குடும்பம் இருக்கையில் அண்ணா குடும்பம் எதற்கு..?" என அரசியல் கணக்கு போட்டு விட்டாரோ..? என எண்ணத் தோன்றுகிறது. மேலும் தங்களின் கட்சியின் பெயரிலேயே அண்ணாவை வைத்திருக்கும் தமிழகத்தை ஆண்ட தற்போதைய எதிர்க்கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்கள் கூட பேரறிஞர் அண்ணா இல்ல திருமண விழாவை புறக்கணிப்பு செய்ததையும், "அண்ணாவின் மடியில் தவழ்ந்தேன்", "அண்ணாவால் வளர்ந்தேன்" என்றெல்லாம் தங்களுக்கு தாங்களே புகழாரம் சூட்டிக் கொண்டவர்களின் குறைந்தபட்ச வாழ்த்துச் செய்தி கூட இல்லாமலும் திராவிட இயக்கத்தின் முன்னோடியான பேரறிஞர் அண்ணா அவர்களின் இல்ல திருமண விழா நடைபெற்றிருப்பதை காணும் போது திமுக, அதிமுக மட்டுமின்றி அண்ணாவின் கொள்கைகளை கடை பிடிப்பதாக தமிழ்நாட்டு உதிரிக் கட்சிகளும் வெறும் கறிவேப்பிலை போலவே பேரறிஞர் அண்ணா அவர்களை அரசியலுக்கு பயன்படுத்தி வருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அதிலும் அண்மையில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்ற மாநாட்டு திடலில் பெரியார், காமராஜர், அம்பேத்கர் உள்ளிட்ட பெருந்தலைவர்களின் கட் அவுட் வைக்கப்பட்டிருந்த நிலையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் கட் அவுட் வைக்காததற்கு பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கும் அளவிற்கு சமூக வலைதளங்களில் திமுகவினர் கடும் எதிர்வினையாற்றினர். அதே சமயம், மாநாட்டு திடலில் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு கட் அவுட் வைக்கவில்லை என்றாலும் கூட அந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் திரு விஜய் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களை நினைவு கூறத் தவறவில்லை. ஆனால் மூச்சுக்கு முன்னூறு தடவை அண்ணா நாமத்தை உச்சரிப்பதாக கூறும் திராவிட இயக்க, திராவிட கட்சிகளின் நிர்வாகிகள் முதல், இந்நாள் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், முன்னாள் முதலமைச்சர், முன்னாள் அமைச்சர் பெருமக்கள் மட்டுமின்றி எதிரி, கட்சித் தலைவர்கள் வரை ஒருவர் கூட பேரறிஞர் அண்ணா இல்ல திருமண விழாவிற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தாமல் செய்ததும், சமூக வலைதளங்களில் கூட வாழ்த்துச் செய்தி பகிர்ந்திட மனமில்லாமல் போனதும், பேரறிஞர் அண்ணா இல்ல திருமண விழா குறித்த செய்திகளை எந்த ஒரு அச்சு, காட்சி ஊடகங்களும் வெளியிடாததும் தமிழக அரசியலில் நடைபெற்ற மிகப்பெரிய வரலாற்றுப் பிழை என்றால் அது மிகையாகாது.
#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.
———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...