சாலைப்போக்குவரத்து பாதுகாப்பு மசோதா என புதிய மசோதா ஒன்று தயாராகிக் கொண்டிருக்கின்றது. சாலைப்போக்குவரத்தையும், கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும், தனியாருக்கும் தாரை வார்க்கும் வகையில் மோடி அரசில் இந்த மசோதா உள்ளது.
மேலைநாடுகளில் கடைபிடிக்கப்படும் ஒட்டுனர்கள் இல்லாமல், அவர்களவர்களே தங்கள் வாகனங்களை இயக்கவேண்டுமென்ற நிலைக்கு இந்தியாவும் வந்துவிடும்.
ஓட்டுனர் என்ற பணியாளர்களை வைத்துக் கொள்ள எதிர்காலத்தில் வாய்ப்புகளே இருக்காது என்ற அச்சம் ஏற்படுகிறது. இதனால் பலருக்கு வேலைவாய்ப்புகளே இல்லாமல் போய்விடும்.
அதுமட்டுமில்லாமல், தேசிய போக்குவரத்து ஆணையம் மற்றும் மாநில போக்குவரத்து ஆணையம் எனப் பல பிரிவுகள் அமைக்க இம்மசோதா மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசுப் போக்குவரத்து வழித்தடங்களில் தனியார் பேரூந்துகளுக்கு அனுமதி இல்லை என்ற நிலையில், இம்மசோதா சட்டமானால் டெண்டர் எடுக்கும் எந்த நிறுவனமும் பஸ்களை இயக்க வழித்தடங்களைத் தனியார் கார்ப்ரேட் நிறுவனங்கள் தான் முடிவு செய்யும் எதிர்காலத்தில். கட்டணங்களும் தனியார் நிறுவனங்களே முடிவு செய்துகொள்ளலாம்.
இப்படிப் பட்ட மசோதா ஒன்று சாலைப் போக்குவரத்தையும் தனியாருக்கு வழங்கிவிடச் சாதகமாய் தயாராகிக் கொண்டிருக்கின்றது.
-*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-04-2015.
No comments:
Post a Comment